தமிழ்

குழு : ஓஹோ ஹோ

பெண் : ஷா லா லா

ஷா லா லா

ரெட்டை வால் வெண்ணிலா

என்னை போல் சுட்டிப் பெண்

இந்தப் பூமியிலா

பெண் : செ செ செ செவ்வந்தி

என் தோழி சாமந்தி

வெற்றிக்கு எப்போதும்

நான் தானே முந்தி

பெண் : கொட்டும் அருவி வி வி

என்னை தழுவி வி வி

அள்ளிக் கொள்ள ஆசைக் கள்வன்

இங்கே வருவானோ

பெண் : ஷா லா லா

ஷா லா லா

ரெட்டை வால் வெண்ணிலா

என்னைப் போல் சுட்டிப் பெண்

இந்தப் பூமியிலா

பெண் : மரங்களே மரங்களே

ஒற்றை காலில் இருப்பதேன்

என்னவோ என்னவோ தவமா

பெண் : நதிகளே நதிகளே

சத்தம் போட்டு தான் நடப்பதேன்

கால்களின் விரல்களே கொலுசா

பெண் : பாரதி போல தலைப்பாகை

கட்டியதே தீக்குச்சி

நெருப்பில்லாமல் புகை வருதே

அதிசயமான நீர்வீழ்ச்சி

பெண் : இடையை ஆட்டி

நடையை ஆட்டி

ஓடும் ரயிலே

சொல் நாட்டியமா

ஹேய் நாட்டியமா

பெண் : தாய் முகம் பார்த்த நாள்

தாவணி போட்ட நாள்

மறக்குமா மறக்குமா நெஞ்சே

பெண் : மழைத்துளி ரசித்ததும்

பனித்துளி ருசித்ததும்

கரையுமா கரையுமா கண்ணில்

பெண் : ஹைதர் கால வீரன்தான்

குதிரை ஏறி வருவானோ

காவல் தாண்டி என்னை தான்

கடத்திக் கொண்டு போவானோ

பெண் : கண்ணுக்குள் முதல்

நெஞ்சுக்குள் வரை

ஆசை சேமிக்கிறேன்

யாரவனோ யாரவனோ

பெண் : ஷா லா லா

ஷா லா லா

ரெட்டை வால் வெண்ணிலா

என்னை போல் சுட்டிப் பெண்

இந்த பூமியிலா

பெண் : கொட்டும் அருவி வி வி

என்னை தழுவி வி வி

அள்ளிக் கொள்ள ஆசைக் கள்வன்

இங்கே வருவானோ

Song information

படம்: கில்லி (2004)

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: பா. விஜய்

பாடியவர்: சுனிதி சௌஹான்

Album: கில்லி

Explore this song