தமிழ்

பெண் : ஆ ஆ

பெண் : ஆ

ஆண் : பூவாசம்

புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தால்

தீ வந்து

விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்

உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ

என்னாகுவேன்

ஆண் : உயிர் வாங்கிடும்

ஓவியம் நீயடி இ இ இ

ஆண் : பூவாசம்

புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தால்

தீ வந்து விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தால்

ஆண் : ம்ம்ம்

புள்ளி சேர்ந்து

புள்ளி சேர்ந்து ஓவியம்

உள்ளம் சேர்ந்து

உள்ளம் சேர்ந்து காவியம்

பெண் : கோடு கூட

ஓவியத்தின் பாகமே

ஊடல் கூட

காதல் என்று ஆகுமே

ஆண் : ஒரு வானம் வரைய

நீல வண்ணம்

நம் காதல் வரைய

என்ன வண்ணம்

பெண் : என் வெட்கத்தின்

நிறம் தொட்டு

விரல் என்னும்

கோல் கொண்டு

நம் காதல் வரைவோமே

வா ஆ ஆ

ஆண் : பூவாசம்

புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தால்

தீ வந்து

விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தால்

பெண் : ஆ ஆ

பெண் : ஆ

பெண் : ஓவியத்தின் ஜீவன்

எங்கு உள்ளது

ஆண் : உற்றுப் பார்க்கும்

ஆளின் கண்ணில் உள்ளது

பெண் : பெண்ணுடம்பில்

காதல் எங்கு உள்ளது

ஆண் : ஆண் தொடாத

பாகம் தன்னில் உள்ளது

பெண் : நீ வரையத் தெரிந்த

ஒரு நவீன கவிஞன்

பெண் வசியம் தெரிந்த

ஒரு நளிந்த கலைஞன்

ஆண் : மேகத்தை ஏமாற்றி

மண் சேரும் மழை போல

மடியோடு விழுந்தாயே

வா ஆ ஆ

ஆண் : பூவாசம்

புறப்படும் பெண்ணே

நான் பூ வரைந்தால்

பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : தீ வந்து

விரல் சுடும் கண்ணே

நான் தீ வரைந்தால்

பெண் : உயிரல்லதெல்லாம்

உயிர் கொள்ளும் என்றால்

உயிருள்ள நானோ

என்னாகுவேன்

ஆண் : உயிர் வாங்கிடும்

ஓவியம் நீயடி

பெண் : ஆ ஆ

பெண் : ஆ

Song information

படம்: அன்பே சிவம் (2003)

பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்

இசை: வித்யாசாகர்

பாடலாசிரியர்: வைரமுத்து

Album: அன்பே சிவம்

Explore this song