தமிழ்

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்

அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்

அடி ராதா தெளியாதா இளம் போதை

தொடு ராதா தொடராதா அதன் பாதை

கொடுத்தா நான் எடுத்தா தேன் வடியாதா

அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி

அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி

நீதானே நான் போற்றும் சிவ லிங்கம்

இவள் மேனி சரி பாதி உன் அங்கம்

பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்

அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்

ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க

அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த

ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க

அடியேனும் தான் பாலில் அபிஷேகம் நடத்த

நீ வாங்க வந்த வரம் என்னவோ

நீங்காமல் காட்சி தர வேண்டுமோ

நான் பார்க்க வரம் கேட்க

அருள் சேர்க்க வா ஈஸ்வரி ஹா

அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி

அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி

புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க

ராதா மனம் அதைப் பார்த்தாலே துடிக்க

புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க

ராதா மனம் அதைப் பார்த்தாலே துடிக்க

குழலோடு வந்த கோபாலன் நான்தான்

கோபாலன் பாடும் பூபாளம் நீ

உன் பாட்டு நான் கேட்டு

பாராட்ட நாள் வேண்டுமோ ஹோ

அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்

அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்

நீதானே நான் போற்றும் சிவ லிங்கம்

இவள் மேனி சரி பாதி உன் அங்கம்

கொடுத்தா நான் எடுத்தா தேன் வடியாதா

ராதா தா தா தா

லல்லா லலலா லலலா லல லல்லல்லா

லல்லா லலலா லலலா லல லல்லல்லா

Song information

படம்: சட்டம் (1983)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

இசை: கங்கை அமரன்

இயற்றியவர்: வாலி

Album: சட்டம்

Explore this song