தமிழ்

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்

என்னாளும் சந்தோஷம்

என் தாகங்கள் தீர்ந்திட

நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா ஓ...

வெண் பஞ்சு மேகங்கள்

உன் பிஞ்சுப் பாதங்கள்

மண் தொட்டதால் இன்று

செவ்வானம் போலாச்சு

விண் சொர்க்கமே பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே

விண் சொர்க்கமே பொய் பொய்

என் சொர்க்கம் நீ பெண்ணே

சூடிய பூச்சரம் வானவில் தானோ?

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்

என்னாளும் சந்தோஷம்

என் தாகங்கள் தீர்ந்திட

நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா ஓ...

ஆராதனை நேரம்

ஆலாபனை ராகம்

அலைபாயுதே தாகம்

அனலாகுதே மோகம்

என் மேகமே வா வா

இதழ் நீரைத் தூவு

என் மேகமே வா வா

இதழ் நீரைத் தூவு

மன்மதக் கோவிலில் பாலபிஷேகம்

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்

என்னாளும் சந்தோஷம்

என் தாகங்கள் தீர்ந்திட

நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா ஓ...

Song information

படம்: நீங்கள் கேட்டவை (1984)

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: புலமைப்பித்தன்

Album: நீங்கள் கேட்டவை

Explore this song