தமிழ்
பெண் : வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே ஆண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக் கொண்டு திரிந்தாயே ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக் கொண்டு திரிந்தாயே பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே ஆண்: ஆஆஆ பெண் : மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே ஆண் : சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பல கோடி பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா ஆண் : வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே பெண் : பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே ஆண் : ராச லீலை புரிந்தவனே ராஜ வேலை தெரிந்தவனே கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே பெண் : ஆஆஆ ஆண் : கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே பெண் : கவிகள் உன்னை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே வானில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : ஆஹஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே ஆண் : ம்ம்ம் பெண் : பல விந்தைகள் செய்தவனே ஆண் : ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே பெண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
Song video
Song details
படம்: சலங்கை ஒலி (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: சலங்கை ஒலி
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: எஸ்.பி. சைலஜா
- Film / album: சலங்கை ஒலி
- Composer: இளையராஜா
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஜெயப்பிரதா
- Actor: சரத்பாபு
- Actor: எஸ்.பி. சைலஜா
- Actor: டப்பிங் ஜானகி
- Actor: சக்ரி டொலெட்டி
- Actor: மஞ்சு பார்கவி
- Actor: கீதா