தமிழ்

பூவாக என் காதல் தேனூறுதோ

தேனாக தேனாக வானூறுதோ

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானம் ஏது

ஆறாம ஆறாம காயங்கள் ஏது

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே என்னம்மா

உன் காதல் வாசம்

என் மோகம் பேசும்

காலங்கள் பொய்யானதே

தீராத காதல்

தீராத மோதல்

தூரங்கள் வழி மாறுமோ

தூரங்கள் வழி மாறுமோ

பால் பார்த்து ஏங்கும்

சிறு புள்ளின் தாகம்

கானல்கள் நிறைவேற்றுமோ

நீரின்றி மீனும்

சோறுண்டு வாழும்

வாழ்வின்றி வாழ்வாகுமோ ஓஓஓ

ஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆ

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானம் ஏது

ஆறாம ஆறாம காயங்கள் ஏது

மீட்டாத வீணை தருகின்ற ராகம்

கேட்காது பூங்காந்தளே

பூட்டாத தாயின் கனக்கின்ற பால் போல்

என் காதல் கிடக்கின்றதே

காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும்

காலங்கள் கைக்கூடுதே

தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி

தொடும் நேரம் தொலைவாகுதே

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது

ஆறாம ஆறாம காயங்கள் ஏது

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணம்மா கண்ணம்மா

கண்ணிலே கண்ணம்மா என்னம்மா

Song information

படம்: காலா (2018)

இசை: சந்தோஷ் நாராயணன்

Album: காலா

Explore this song