தமிழ்
பெண் : ஏனோ... இன்பமே... புதுமையாய் காண்பதே ஏஏஏ காதல் என்பது இதுதானோ இதுதானோ அறியேனே ஏஏஏ பெண் : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே ஏஏஏ பெண் : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே பெண் : கன்னி என்றேனடி கைகளை பிடித்தார் காதலி என்றென்னை கொஞ்சியே அழைத்தார் பெண் : கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே ஆண் : சபாஷ் சரியான போட்டி பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலு வென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் பெண் : ஆடுவேன் பாரடி பாடுவேன் கேளடி ஆடுவேன் பாரடி இனி அனைவரும் மயங்கிட பெண் : ஜில்லு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே ஜகத்தை மயக்கிடுவேனே கல கல கல கலவென்று ஜோராய் கையில் வளை பேசும் பாராய் பெண் : ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும் அன்பின் பாதையில் அணையிடலாமோ பேதமையாலே மாதே இப்போதே காதலை வென்றிட கனவு காணாதே பெண் : சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி சாதுர்யம் பேசாதேடி என் சலங்கைக்கு பதில் சொல்லடி பெண் : நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி நடுவிலே வந்து நில்லடி நடையிலே சொல்லடி பெண் : ஆடும் மயில் எந்தன் முன்னே என்ன ஆணவத்தில் வந்தாயோடி பாடும் குயில் கீதத்திலே பொறாமை கொண்டு படமெடுத்து ஆடாதேடி நீ படமெடுத்து ஆடாதேடி பெண் : இன்னொருத்தி நிகராகுமோ எனக்கின்னொருத்தி நிகராகுமோ இடி இடித்தால் மழையாகுமோ பேதை பெண்ணே இன்னொருத்தி நிகராகுமோ பெண் : மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி இந்த மின்னலுக்கு அஞ்சேனடி வீண் வாதமென்ன முன்னே வந்து நீ ஆடடி
Song information
படம்: வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
பாடியவர்கள்: பி. லீலா & ஜிக்கி
இசை: ஸி. ராமச்சந்திரா
பாடலாசிரியர்: கொத்தமங்கலம் சுப்பு
Album: வஞ்சிக்கோட்டை வாலிபன்
Explore this song
- Singer: பி. லீலா & ஜிக்கி
- Film / album: வஞ்சிக்கோட்டை வாலிபன்
- Composer: ஸி. ராமச்சந்திரா
- Lyricist: கொத்தமங்கலம் சுப்பு
- Actor: ஜெமினி கணேசன்
- Actor: வைஜயந்திமாலா
- Actor: பத்மினி
- Actor: டி.கே. சண்முகம்
- Actor: கண்ணாம்பா
- Actor: எஸ்.வி. சுப்பய்யா
- Actor: எம்.எஸ். சுந்தரிபாய்
- Actor: வீரப்பா
- Actor: டி.கே. ராமச்சந்திரன்
- Actor: விஜயகுமாரி
- Actor: தங்கவேலு
- Actor: முத்துலட்சுமி