தமிழ்

ஆண் : வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

ஆண் : அகம்பாவம் கொண்ட சதியாள்

அறிவால் உயர்ந்திடும் பதி நான்

அகம்பாவம் கொண்ட சதியாள்

அறிவால் உயர்ந்திடும் பதி நான்

சதி பதி விரோதம் மிகவே

சிதைந்தது இதம் தரும் வாழ்வே

பெண் : வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

பெண் : வாக்குரிமை தந்த பசியால்

வாழ்ந்திடவே வந்த சதி நான்

வாக்குரிமை தந்த பசியால்

வாழ்ந்திடவே வந்த சதி நான்

நம்பிடச் செய்வார் நேசம்

நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

ஆண் : வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

ஆண் : தன் பிடிவாதம் விடாது

என் மனம் போல் நடக்காது

தன் பிடிவாதம் விடாது

என் மனம் போல் நடக்காது

நமக்கென எதுவும் சொல்லாது

நம்மையும் பேச விடாது

பெண் : வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

பெண் : அனுதினம் செய்வார் மோடி

அகமகிழ்வார் போராடி

அனுதினம் செய்வார் மோடி

அகமகிழ்வார் போராடி

இல்லறம் இப்படி நடந்தால்

நல்லறமாமோ நிலவே

இருவர் : வாராயோ வெண்ணிலாவே

கேளாயோ எங்கள் கதையே

வாராயோ வெண்ணிலாவே

Song information

படம்: மிஸ்ஸியம்மா (1955)

பாடியவர்: ஏ.எம். ராஜா மற்றும் பி. லீலா

இசை: ராஜேஸ்வரராவ்

இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்

Album: மிஸ்ஸியம்மா

Explore this song