தமிழ்

பெண் : மாமா மாமா மாமா...

மாமா மாமா மாமா...

ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா...

ஏம்மா ஏம்மா ஏம்மா...

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா...

வட்டமிட்டு சுத்தி சுத்தி...

கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா...

குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா...

வட்டமிட்டு சுத்தி சுத்தி...

கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா...

பெண் : தாலி கட்டுமுன்னே...

கை மேல படலாமா...

மாமா மாமா மாமா...

குழு : மாமா மாமா மாமா...

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்...

ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு...

எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா...

பெண் : ஓஹோ ஓய்...

குழு : வெட்டும் விழிப் பார்வையினால்...

ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு...

எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா...

ஆண் : கையைத் தொட்டுப்

பேச மட்டும்...

தடை போடலாமா...

ஏம்மா ஏம்மா ஏம்மா...

குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா...

பெண் : ஊரறிய நாடறிய பந்தலிலே...

நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே...

குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே...

நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே..

பெண் : ஒண்ணாகி...

ஆண் : ஆஹா...

பெண் : ஒண்ணாகி உறவு முறை...

கொண்டாடும் முன்னாலே...

ஒருவர் கையை

மற்றொருவர் பிடிக்கலாமா...

இதை உணராமல்

ஆம்பளைங்க துடிக்கலாமா...

மாமா மாமா மாமா...

குழு : மாமா மாமா மாமா...

குழு : ஹோய் ஹோய் ஹோய்...

குழு : ஹோய் ஹோய் ஹோய்...

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே...

தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே...

குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே...

தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே...

ஆண் : ஜாடை காட்டி...

பெண் : ஓஹோ...

ஆண் : ஆசை மூட்டி...

பெண் : ஓஹோ...

ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி...

சல்லாபப் பாட்டுப் பாடி...

நீங்க மட்டும் எங்க நெஞ்சை

தாக்கலாமா...

உள்ள நிலை தெரிஞ்சும்

இந்தக் கேள்வி கேட்கலாமா...

ஏம்மா ஏம்மா ஏம்மா...

குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா...

பெண் : கன்னிப் பொண்ணப்

பாத்தவுடன் காதலிச்சு...

அவளைக் கைவிட்டு

ஒம்பது மேல் ஆசை வச்சு...

குழு : கன்னிப் பொண்ணப்

பாத்தவுடன் காதலிச்சு...

அவளைக் கைவிட்டு

ஒம்பது மேல் ஆசை வச்சு...

பெண் : வண்டாக...

ஆண் : ஆஹா...

பெண் : வண்டாக மாறுகிற

மனமுள்ள ஆம்பளைங்க...

கொண்டாட்டம் போடுவதப்

பார்த்ததில்லையா...

பெண்கள் திண்டாடும்

கதைகளைக் கேட்டதில்லையா...

மாமா மாமா மாமா...

குழு : மாமா மாமா மாமா...

குழு : ஹோய் ஹோய் ஹோய்...

குழு : ஹோய் ஹோய் ஹோய்...

ஆண் : ஒண்ண விட்டு

ஒண்ணத் தேடி ஓடுறவன்...

நிதமும் ஊரை ஏச்சு...

வேஷமெல்லாம் போடுறவன்...

குழு : ஒண்ண விட்டு

ஒண்ணத் தேடி ஓடுறவன்...

நிதமும் ஊரை ஏச்சு...

வேஷமெல்லாம் போடுறவன்...

ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே

உத்துப் பாத்தா நீங்க இப்போ

சொல்லுவது எல்லாமே உண்மைதான்...

பெண் : ஓ...

ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும்...

நன்மை தான் நன்மை தான்...

ஆமா ஆமா ஆமா...

குழு : ஆமா ஆமா ஆமா...

பெண் : கட்டுப்பாட்ட மீறாம

சட்டதிட்டம் மாறமே

காத்திருக்க வேணும்

கொஞ்ச காலம் வரையில்...

ஆண் : ஓஹோ...

குழு : கட்டுப்பாட்ட மீறாமே

சட்டதிட்டம் மாறமே

காத்திருக்க வேணும்

கொஞ்ச காலம் வரையில்...

பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால்...

ஏது தடை .. ஏது தடை...

மாமா மாமா மாமா...

ஆண் : ஆமா...

குழு : மாமா மாமா மாமா...

குழு : ஆமா ஆமா ஆமா...

ஆண் : போடு...

குழு : ஆமா ஆமா ஆமா...

Song information

படம்: குமுதம் (1961)

பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணி

இசை: கே.வி. மகாதேவன்

இயற்றியவர்: ஏ. மருதகாசி

Album: குமுதம்

Explore this song