தமிழ்
பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஹஹா ஓஹோஹோ ஆஆஆ ஓஓஒ ஆஹஹா ஓஹோஹோ பெண் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா பெண் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா பெண் : பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம் பெண் : வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீந்தி வா ஆண் : கண்ணில் தெரியும் வண்ணப் பறவை கையில் கிடைத்தால் வாழலாம் கருத்தில் வளரும் காதல் எண்ணம் கனிந்து வந்தால் வாழலாம் கன்னி இளமை என்னை அணைத்தால் தன்னை மறந்தே வாழலாம் ஆண் : வாழச் சொன்னால் வாழ்கிறேன் மனமா இல்லை வாழ்வினில் ஆழக் கடலில் தோணி போலே அழைத்துச் சென்றால் வாழ்கிறேன் பெண் : ஏரிக் கரையில் மரங்கள் சாட்சி ஆண் : ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி பெண் : துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி ஆண் : துடித்து நிற்கும் இளமை சாட்சி பெண் : இருவர் வாழும் காலம் முழுதும் ஒருவராக வாழலாம் ஆண் & பெண் : வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம் பெண்: ஆஆஆ ஆஆஆ ஆண் : வாழ நினைத்தோம் வாழுவோம் வழியா இல்லை பூமியில் காதல் கடலில் தோணி போலே காலம் முழுதும் நீந்துவோம்
Song information
படம்: பலே பாண்டியா (1962)
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
இயற்றியவர்: கண்ணதாசன்
Album: பலே பாண்டியா
Explore this song
- Singer: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
- Film / album: பலே பாண்டியா
- Composer: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
- Actor: சிவாஜி கணேசன்
- Actor: தேவிகா
- Actor: எம்.ஆர். ராதா
- Actor: பாலாஜி
- Actor: எம்.ஆர். சந்தானம்
- Actor: கே.வி. சீனிவாசன்
- Actor: தங்கராஜ்
- Actor: எஸ்.ஏ.ஜி. சாமி
- Actor: வசந்தி
- Actor: ஸந்தியா
- Actor: எம்.எஸ்.எஸ். பாக்கியம்