தமிழ்
ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல பெண்: கம்பங் கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல கண்ட போதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள ஆண்: நாக்குல மூக்கையே ஹேஹே தொட்டவன் நானடி பார்வையால் உசுரையே ஓகோ தொட்டவ நீயடி பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல ஆண்: ஐயாறெட்டு நெல்லைப் போல அவசரமா சமஞ்ச அயித்த மக பஞ்சத்துக்கு ஆதரமா அமஞ்ச பெண்: குட்டிபோட்ட பூனைப் போல காலச் சுத்திக் கொழஞ்ச பாவமென்னு நீவி விட்டா கல்லுப் போட துணிஞ்ச ஆண்: சொந்தக்காரன் நான்தானே தொட்டுப் பாக்கக் கூடாதா பெண்: கன்னம்தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா ஆண்: இந்த நாட்டில் தீண்டமைதான் இன்னும் உள்ளதா பெண்: வயசுக்கு வந்தப் பூ ஒகோ ஆசையே பேசுமா வண்டுக்கும் பூவுக்கும் ஒகோ சண்டையா சத்தமா ஆண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல பெண்: மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க மாலையும் சூடவில்ல பெண்: கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா கம்மாத்தண்ணி வத்தும் போது திரும்பிறுவோம் மாமா ஆண்: நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன் நீயும் கொஞ்சம் வாம்மா அங்கே இங்கே கையிப்படும் சொல்லிபுட்டேன் ஆமா பெண்: நிலாக் கறையை அழிச்சாலும் உன்னைத் திருத்த முடியாது ஆண்: பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடையாது பெண்: போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது ஆண்: கிள்ளவா அள்ளவா ஓகோ சொல்லடி செய்யலாம் வேட்டியா சேலையா ஒகோ பட்டிமன்றம் வைக்கலாம் பெண்: தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல ஆண்: மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாரும் இல்ல பெண்: கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சி எல்லாம் சேர்தல் போல ஆண்: கண்ட போதே இந்த மூஞ்சி நெறஞ்சுப் போச்சு நெஞ்சுக்குள்ள பெண்: மாமனே மாமனே ஒகோ ஓங்கிட்ட ஒட்டவா பூமிக்கும் வேருக்கும் ஓகோ சண்டையா சத்தமா
Song information
படம்: பசும்பொன் (1995)
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: சுஜாதா மோகன், கிருஷ்ணசந்தர்
Album: பசும்பொன்
Explore this song
- Singer: சுஜாதா மோகன்
- Singer: கிருஷ்ணசந்தர்
- Film / album: பசும்பொன்
- Composer: வித்யாசாகர்
- Lyricist: வைரமுத்து
- Actor: சிவாஜி கணேசன்
- Actor: பிரபு
- Actor: சிவக்குமார்
- Actor: ராதிகா
- Actor: சரண்யா
- Actor: பொன்வண்ணன்
- Actor: விக்னேஷ்
- Actor: வடிவேலு
- Actor: இளவரசு
- Actor: யுவராணி
- Actor: செண்பகம்
- Actor: பெரிய கருப்பு தேவர்
- Actor: தேனி குஞ்சரம்மாள்