தமிழ்

ஏ தந்தந தந்தந தான தந்தந

தான தந்தந தந்நானே

ஏ தான தந்தந தந்தந தந்தந

தந்தந தந்தந தந்நானே

ஏ தந்தந தந்தந தான தந்தந

தான தந்தந தந்நானே

ஏ தான தந்தந தந்தந தந்தந

தந்தந தந்தந தந்நானே

சாம கொட தொடங்கிடுச்சு ராசா

நல்ல சங்கெடுத்து ஊதுங்கய்யா ராசா

சந்தனத்த எடுத்துக்கிட்டு ராசா

நம்ப ஊரு சனம் திரட்டி வையி ராசா

அந்த ஒத்தையடி பாதையில அவன்

ஓடி வரான் காளமாடன்

அங்க உச்சிப்பன உசரத்துல அவன்

ஆடி வரான் காளமாடன்

கொம்பு ரெண்டு குறுகுறுக்க

கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க

நாலு காலு பாய்ச்சலிலே

பாடி வரான் காளமாடன்

கொம்பு ரெண்டு குறுகுறுக்க

கண்ணு ரெண்டும் தீப்பிடிக்க

நாலு காலு பாய்ச்சலிலே

பாடி வரான் காளமாடன்

ஏ காட்டரளி மாலை கட்டி

கெளம்பி வரான் காளமாடன்

காட்டரளி மாலை கட்டி

கெளம்பி வரான் காளமாடன்

அவன் பச்ச கறி படையல தான்

கேட்டு வரான் காளமாடன்

பச்ச கறி படையல தான்

கேட்டு வரான் காளமாடன்

கழுத்து மணி ஓசை கட்டி

புழுதி மண்ண பூசிகிட்டு

கழுத்து மணி ஓசை கட்டி

புழுதி மண்ண பூசிகிட்டு

அவன் நாலு காலு பாய்ச்சலிலே

பாடி வரான் காளமாடன்

நாலு காலு பாய்ச்சலிலே

பாடி வரான் காளமாடன்

ஏ செவ்வரளி காடு

இங்க சிந்து ரத்தம் பாரு

ஏ செவ்வரளி காடு

சிந்து ரத்தம் பாரு

பகை இங்க ஆடும் பேயாட்டமே

திசையெங்கும் போடும் வெறியாட்டமே

பகை இங்க ஆடும் பேயாட்டமே

திசையெங்கும் போடும் வெறியாட்டமே

வெறியாட்டமே ஏஏஏ

தீப்பந்தம் கொளுத்துங்கய்யா ராசா

ராசா

தொரட்டும் தீமையெல்லாம் எரியட்டுமே ராசா

ராசா

வேல் கம்ப தூக்கிகிட்டு ராசா

மறிக்கும் வேலியெல்லாம் ஒடச்சி எறி ராசா

ஏஏஏ வேட்டெடுத்து வெடி வெடிக்க

வெளிச்சமாக வாராங்கய்யா

ஏ எதிரியெல்லாம் கொல நடுங்க

கொலவ போட்டு பாடுங்கய்யா

கண்ணுக்குள்ள கனவிருக்க

களம் இங்க காத்திருக்க

நெஞ்சுக்குள்ள திமிருருக்க

நித்தம் அது துடிச்சிருக்க

கண்ணுக்குள்ள கனவிருக்க

களம் இங்க காத்திருக்க

நெஞ்சுக்குள்ள திமிருருக்க

நித்தம் அது துடிச்சிருக்க

ஏ காட்டரளி மாலை கட்டி

கெளம்பி வரான் காளமாடன்

ஏ காட்டரளி மாலை கட்டி

கெளம்பி வரான் காளமாடன்

அவன் பச்ச கறி படையல தான்

கேட்டு வரான் காளமாடன்

அவன் பச்ச கறி படையல தான்

கேட்டு வரான் காளமாடன்

கழுத்து மணி ஓசை கட்டி

புழுதி மண்ண பூசிகிட்டு

கழுத்து மணி ஓசை கட்டி

புழுதி மண்ண பூசிகிட்டு

அவன் நாலு காலு பாய்ச்சலிலே

பாடி வரான் காளமாடன்

நாலு காலு பாய்ச்சலிலே

பாடி வரான் காளமாடன்

Song information

படம்: பைசன் காளமாடன் (2025)

பாடியவர்: வி.எம். மகாலிங்கம்

இசை: நிவாஸ் கே பிரசன்னா

பாடலாசிரியர்: மாரி செல்வராஜ்

Album: பைசன் காளமாடன்

Explore this song