தமிழ்

பெண் : காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

காதலே நிம்மதி

கனவுகளே அதன் சன்னிதி

கவிதைகள் பாடி

நீ காதலி நீ காதலி நீ காதலி

ஆண் : கண்ணும் கண்ணும் மோதுமம்மா

நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

பெண் : தூக்கம் கெட்டுப் போகுமம்மா

தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும்

அன்பையே போதிக்கும்

காதல் தினம் தேவை

பெண் : கெஞ்சினால் மிஞ்சிடும்

மிஞ்சினால் கெஞ்சிடும்

காதல் ஒரு போதை

ஆண் : காதலுக்குப் பள்ளி இல்லையே

அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

பெண் : காலமெல்லாம் காதல் வாழ்க

பெண் : ஜாதி இல்லை பேதம் இல்லை

சீா்வாிசை தானம் இல்லை காதல்

ஆண் : ஆதி இல்லை அந்தம் இல்லை

ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்

பெண் : ஊரென்ன பேரென்ன

தாய் தந்தை யாரென்ன

காதல் ஒன்று சேரும்

ஆண் : நீயின்றி நானில்லை

நானின்றி நீயில்லை

காதல் மனம் வாழும்

பெண் : ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே

அது காசு பணம் கேட்பதில்லையே

ஆண் : காலமெல்லாம் காதல் வாழ்க

காதலெனும் வேதம் வாழ்க

ஆண் : காதலே நிம்மதி

கனவுகளே அதன் சன்னிதி

கவிதைகள் பாடி

நீ காதலி நீ காதலி நீ காதலி

Song information

படம்: காதல் கோட்டை (1996)

இசை: தேவா

பாடலாசிரியர்: அகத்தியன்

பாடியவர்கள்: பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா

Album: காதல் கோட்டை

Explore this song