தமிழ்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண்: என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னைச் சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா ஆண்: உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா? அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா? உன்னை நான் என்பதா? பெண்: என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னைச் சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண்: நதியாக நீயும் இருந்தாலே நானும் நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன் பெண்: இரவாக நீயும் நிலவாக நானும் நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன் ஆண்: முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய் மறுநாள் பார்கையிலே வனமாய் மாறிவிட்டாய் நாடித் துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய் நெஞ்சில் நீ வாழ்கிறாய் பெண்: என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னைச் சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா பெண்: பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால் எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே ஆண்: ஆகாயம் ஓர்நாள் விடியாமல் போனால் எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே பெண்: அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய் என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய் தீபம் நீயென்றால் அதில் நானே திரி ஆகிறேன் தினம் திரியாகிறேன் ஆண்: என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னைச் சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா ஆண்: உன்னை மழை என்பதா? இல்லை தீ என்பதா? அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா? உன்னை நான் என்பதா? பெண்: என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா உன்னைச் சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா
Song information
படம்: உன்னை நினைத்து (2002)
இசை: சிற்பி
பாடலாசிரியர்: பா. விஜய்
பாடியவர்கள்: உன்னி மேனன், சுஜாதா
Album: உன்னை நினைத்து
Explore this song
- Singer: உன்னி மேனன்
- Singer: சுஜாதா
- Film / album: உன்னை நினைத்து
- Composer: சிற்பி
- Lyricist: பா. விஜய்
- Actor: சூர்யா
- Actor: சினேகா
- Actor: லைலா
- Actor: ரமேஷ் கண்ணா
- Actor: டெல்லி கணேஷ்
- Actor: தலைவாசல் விஜய்