தமிழ்

பெண் : உன்னை

கண் தேடுதே (விக்கல்)

உன் எழில் காணவே...

உளம் நாடுதே (விக்கல்)

உன்னை கண் தேடுதே

உன் எழில் காணவே...
உளம் நாடுதே (விக்கல்)

உறங்காமலே என் மனம் வாடுதே

உன்னை (விக்கல்) கண் தேடுதே

உன் எழில் காணவே...

உளம் நாடுதே

பெண் : பெண்ணே தன் ஆசையை

பேசுதல் உண்டோ...

பெண்ணே தன் ஆசையை

பேசுதல் உண்டோ...

கண் பேசும் ஆவல் புரியாததோ

என் கண் பேசும் ஆவல் புரியாததோ

அறியாத பாவனை (விக்கல்)

இனி மேலும் ஆகுமோ

அறியாத பாவனை

இனி மேலும் ஆகுமோ... ஓ

பெண் : உன்னை (விக்கல்) கண் தேடுதே

உன் எழில் காணவே

உளம் நாடுதே

பெண் : மங்கை என் புன்னகையிலே

மங்காத பேரழகிலே

மயங்காதவர் யாரோ... ஓ... ஓ... ஓ...

ஒ... ஒ... ஒ... ஒ... (விக்கல்)

உன்னை கண் தேடுதே

உன் எழில் காணவே

உளம் நாடுதே

பெண் : எழில் ராணி போலே...

என்னை காண்பதாலே...

எழில் ராணி போலே...

என்னை காண்பதாலே...

ஜகமே என் காலில் சுழன்றாடுதே பார்

ஜகமே என் காலில் சுழன்றாடுதே...

பெண் : எனதாவல் யாவுமே

நிறைவேறும் திண்ணமே

எனதாவல் யாவுமே

நிறைவேறும் திண்ணமே...

பெண் : உன்னை(விக்கல்) கண் தேடுதே

உன் ...எழில் காணவே ...

உளம் நாடுதே

உறங்காமலே என் மனம் வாடுதே...

உன்னை கண் தேடுதே...

உன்...

Song information

படம்: கணவனே கண்கண்ட தெய்வம் (1955)

பாடியவர்: பி. சுசீலா

இசை: ஏ. ராமராவ் மற்றும் ஹேமந்த குமார்

இயற்றியவர்: கு.ம. பாலசுப்ரமண்யம்

Album: கணவனே கண்கண்ட தெய்வம்

Explore this song