தமிழ்
பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன் பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்னை பித்தளையா தவறாக நான் நினைச்சேன் நோில் வந்த ஆண்டவனே ஆண் : ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் பெண் : செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான் ஆண் : கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் பெண் : இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் ஆண் : விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் பெண் : உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அா்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் ஆண் : உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் ஆண் : வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே பெண் : என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே ஆண் : எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா பெண் : நடக்கையில் உந்தன் கூட வரும் நிழல் போலே நானல்லவா ஆண் : கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் ஆண் : என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச ஆண் : திருக்கோயில் வீடு என்று விளக்கேத்த நீயும் வந்த பெண் : நோில் வந்த ஆண்டவனே
Song information
படம்: மறுமலர்ச்சி (1998)
இசை: எஸ்.ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா
Album: மறுமலர்ச்சி
Explore this song
- Singer: பி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ரா
- Film / album: மறுமலர்ச்சி
- Composer: எஸ்.ஏ. ராஜ்குமார்
- Lyricist: வாலி
- Actor: மம்முட்டி
- Actor: தேவயானி
- Actor: ரஞ்சித்
- Actor: மன்சூர் அலி கான்
- Actor: கலாபவன் மணி
- Actor: மனோரமா
- Actor: ஆர். சுந்தர்ராஜன்
- Actor: மேஜர் சுந்தர்ராஜன்
- Actor: ஜோதி லட்சுமி
- Actor: விவேக்
- Actor: பாண்டு
- Actor: வாசு விக்ரம்
- Actor: பாலா சிங்
- Actor: வையாபுரி
- Actor: எம்.என். ராஜம்
- Actor: எஸ்.என். லட்சுமி
- Actor: ஷகிலா
- Actor: சண்முகசுந்தரம்
- Actor: அப்புக்குட்டி