தமிழ்

ஆண் : இறை நூறு இருந்தால் என்ன

மதம் நூறு ஆண்டால் என்ன

பொய் வாழ்ந்தால் என்ன

மெய் வீழ்ந்தால் என்ன

புவி வாழும் பேரன்பிலே

குழு : விஞ்ஞானம் ஒரு பாதி

மெய்ஞானம் ஒரு பாதி

அஞ்ஞானம் சரி பாதியே

ஆண் : கடவுளைக் காப்பாற்ற

மனிதன் உண்டு

மனிதனைக் காப்பாற்ற

கடவுள் உண்டோ

ஆண் : எவர் வேதம் தான் விடை கூறுமோ

ஆங்காரம் ஓர் கண்ணிலே

ஓம்காரம் ஓர் கண்ணிலே

வா நாம் வாழ வாழ்வுண்டு மண் மீதிலே

குழு : சார்வாகம் வைதீகம்

ஆன்மிகம் தெய்வீகம்

நாள்தோறும் ஏதேதோ சொல்கின்றதே

இவை ஏதும் கேளாமல்

இயல்பான ஓர் அன்பில்

இரு ஜீவன் வாழ்கின்றதே

ஆண் : துறவியும் காணாத அமைதி ஒன்று

இவர் வாழ்விலே நிறைந்தோடுதே

ஆகாயம் ஓர் உண்மையே

பூலோகம் ஓர் உண்மையே

வா நாம் காணும் பாசங்கள்

பேருண்மையே

குழு : வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி

நீராகி நூறாகி நிலையாகுமே

ஊனாகி உயிராகி நானாகி நீயாகி

நாமாகி உறவாடுமே

Song information

படம்: வணங்கான் (2025)

பாடியவர்: மது பாலகிருஷ்ணன்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா

Album: வணங்கான்

Explore this song