Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna Female Part Veedhiyilae vandha radham Oru saedhi ingu sonnadhenna Male Part Vanna aadai katti nindradhenna Kannaara kandadhenna Kaiyodu kondadhenna Female Part Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna Male Part Vaanathula velli radham Male Part Mara kilaiyil kaathadikka Pazham udhirum solai idhu Female : Pazhutha pazham kaathirukka Anil kadikkum velai idhu Male Part Anil pol uru maaravaa Adiyen pasiyaaravaa Female : Adharkkor thadai podavaa Udaiyaal ennai moodavaa Male Part Pudhu poovae naan thodum podhu Bodhai varak koodumaa Female : Pani chaaral mel vizhum podhu Aasai alai paayumaa Male Part Nangaiyin melliya idai Nool pol aada Ennaiyum unnaiyum inaithen naan Female Part Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna Male Part Veedhiyilae vandha radham
Oru saedhi ingu sonnadhenna Female Part Vanna aadai katti nindradhenna Kannaara kandadhenna Kaiyodu kondadhenna Male Part Vaanathula velli radham mmm.. Female Part Nadhiyil ezhum neeralai pol Ninaivil ezhum naayagi naan Male : Raaman enum raajanukku Amaindhu vitta raaniyum nee Female Part Nedu naal ulla sondhamo Nilaiyaai vandha bandhamo Male : Pirivae ini illaiyae Panivaai madal mullaiyae Female Part Ilam thogai tholgalil saaya Yedho oru yekkamo Male : Malar maaran pookkalil podum Baanam ennai thaakkumo Female Part Thottadhum pattadhum Sugamae thondra Mannavan kaigalil vizhundhen naan Male Part Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna Female Part Veedhiyilae vandha radham Oru saedhi ingu sonnadhenna Male Part Vanna aadai katti nindradhenna Kannaara kandadhenna Kaiyodu kondadhenna Female Part Vaanathula velli radham Adhu veedhiyilae vandhadhenna Male Part Vaanathula velli radham mm..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வானத்துல வெள்ளி ரதம் அது வீதியில வந்ததென்ன பெண் : வீதியிலே வந்த ரதம் ஒரு சேதி இங்கு சொன்னதென்ன ஆண் : வண்ண ஆடை கட்டி நின்றதென்ன கண்ணார கண்டதென்ன கையோடு கொண்டதென்ன பெண் : வானத்துல வெள்ளி ரதம் அது வீதியில வந்ததென்ன ஆண் : வானத்துல வெள்ளி ரதம்.... ஆண் : மரக்கிளையில் காத்தடிக்க பழம் உதிரும் சோலை இது பெண் : பழுத்த பழம் காத்திருக்க அணில் கடிக்கும் வேளை இது ஆண் : அணில் போல் உருமாறவா அடியேன் பசியாறவா பெண் : அதற்கோர் தடை போடவா உடையால் என்னை மூடவா ஆண் : புதுப் பூவே நான் தொடும் போது போதை வரக் கூடுமா பெண் : பனிச்சாரல் மேல் விழும் போது ஆசை அலை பாயுமா ஆண் : நங்கையின் மெல்லிய இடை நூல் போல் ஆட என்னையும் உன்னையும் இணைத்தேன் நான் பெண் : வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன ஆண் : வீதியிலே வந்த ரதம் ஒரு சேதி இங்கு சொன்னதென்ன பெண் : வண்ண ஆடை கட்டி நின்றதென்ன கண்ணார கண்டதென்ன கையோடு கொண்டதென்ன ஆண் : வானத்துல வெள்ளி ரதம்...ஹ்ஹீம்.... பெண் : நதியில் எழும் நீரலை போல் நினைவில் எழும் நாயகி நான் ஆண் : ராமன் எனும் ராஜனுக்கு அமைந்து விட்ட ராணியும் நீ பெண் : நெடு நாள் உள்ள சொந்தமோ நிலையாய் வந்த பந்தமோ ஆண் : பிரிவே இனி இல்லையே பனிவாய் மடல் முல்லையே பெண் : இளம் தோகை தோள்களில் சாய ஏனோ ஒரு ஏக்கமோ ஆண் : மலர் மாறன் பூக்களில் போடும் பாணம் என்னைத் தாக்குமோ பெண் : தொட்டதும் பட்டதும் சுகமே தோன்ற மன்னவன் கைகளில் விழுந்தேன் நான் ஆண் : வானத்துல வெள்ளி ரதம் அது வீதியிலே வந்ததென்ன...... பெண் : வீதியிலே வந்த ரதம் ஒரு சேதி இங்கு சொன்னதென்ன ஆண் : வண்ண ஆடை கட்டி நின்றதென்ன கண்ணார கண்டதென்ன கையோடு கொண்டதென்ன பெண் : வானத்துல வெள்ளி ரதம் அது வீதியில வந்ததென்ன ஆண் : வானத்துல வெள்ளி ரதம்....
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Mappillai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Enga Ooru Mappillai
- Composer: Ilayaraja