Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Thirumaal perumaikku nigaraedhu… Thirumaal perumaikku nigaraedhu Undhan thiruvadi nizhalukku inaiyaedhu Perumaanae undhan thirunaamam Pathu peyargalil vilangum avathaaram Male Part Thirumaal perumaikku nigaraedhu… Male Part Kadal naduvae veezhndha sadhur vaedham Thannai kaappadharkkae konda avathaaram Macha avathaaram Male Part Asurargal kodumaikku mudivaagum Engal achudhanae undhan avathaaram Koorma avathaaram Male Part Boomiyai kaathida oru kaalam Nee punaidhadhu mattroru avathaaram Varaaga avathaaram Male Part Naaraayanaa ennum thiru naamam Nilai naattida innum oru avathaaram Narasimma avathaaram Male Part Maavali siram thannil kaal vaithu Indha mannum vinnum alandha avathaaram Vaamana avathaaram Male Part Thaai thandhai sollae uyar vaedham Endru saattriyadhum oru avathaaram Parasuraamar avathaaram Male Part Oruvanukku ulagil oru thaaram Enum uyarvinai kaattiya avathaaram Raama avathaaram Male Part Ragu kulam kondadhu oru raaman Pinbu yedhu kulam kandadhu pala raaman Balaraaman Male Part Arasu murai vazhi neri kaakka Nee adainthathu innoru avathaaram Kannan avathaaram Male Part Vidhi nadandhadhena madhi mudindhadhena Vinaiyin payanae uruvaaga Nilai marandhavarum neri izhandhavarum Unarum vannam thelivaaga Innal ozhithu puvi kaakka Nee edukka vendum oru avathaaram Kalki avathaaram Male Part Thirumaal perumaikku nigaraedhu Undhan thiruvadi nizhalukku inaiyaedhu Thirumaal perumaikku nigaraedhu Nigaraedhu… nigaraedhu…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது..... திருமால் பெருமைக்கு நிகரேது..... உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது பெருமானே உந்தன் திருநாமம் பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம் ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது..... ஆண் : கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் தன்னைக் காப்பதற்கே கொண்ட அவதாரம் மச்ச அவதாரம் ஆண் : அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் எங்கள் அச்சுதனே உந்தன் அவதாரம் கூர்ம அவதாரம் ஆண் : பூமியைக் காத்திட ஒரு காலம் நீ புனைந்தது மற்றொரு அவதாரம் வராக அவதாரம் ஆண் : நாராயணா என்னும் திருநாமம் நிலை நாட்டிட இன்னும் ஒரு அவதாரம் நரசிம்ம அவதாரம் ஆண் : மாவலிச் சிரம் தன்னில் கால் வைத்து இந்த மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம் வாமன அவதாரம் ஆண் : தாய் தந்தை சொல்லே உயர் வேதம் என்று சாற்றியதும் ஒரு அவதாரம் பரசுராம அவதாரம் ஆண் : ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம் ராம அவதாரம் ஆண் : ரகு குலம் கொண்டது ஒரு ராமன் பின்பு யது குலம் கண்டது பலராமன் பலராமன் ஆண் : அரசு முறை வழிநெறி காக்க நீ அடைந்தது இன்னொரு அவதாரம் கண்ணன் அவதாரம் ஆண் : விதி நடந்ததென மதி முடிந்ததென வினையின் பயனே உருவாக நிலை மறந்தவரும் நெறி இழந்தவரும் உணரும் வண்ணம் தெளிவாக இன்னல் ஒழித்து புவி காக்க நீ எடுக்க வேண்டும் ஒரு அவதாரம் கல்கி அவதாரம் ஆண் : திருமால் பெருமைக்கு நிகரேது..... உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது திருமால் பெருமைக்கு நிகரேது..... நிகரேது.....நிகரேது.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thirumal Perumai
- Composer: K. V. Mahadevan