Roman script
Singers : A. L. Raghavan and Kausalya Music by : S. M. Subbaih Naidu Male Part Aaa…..aahaa…..haa…aaa….. Aaa…..aaa…..aa….. Male Part Solli theriyaathu solla mudiyaathu Solli theriyaathu solla mudiyaathu Ullaththil iruppathu edhu Varum urakkaththai keduppathu edhu Female Part Ullam thadumaara ulagam urumaara Ullam thadumaara ulagam urumaara Vellaththil midhappathu adhu Mana vaegaththil pirappathu adhu Male Part Kollum madhiyaaga kodhikkum nadhiyaaga Kollum madhiyaaga kodhikkum nadhiyaaga Kannil vizhuvathu edhu Nenjil kavalai tharuvathu edhu Female Part Anji nadamaadum pinju udalaadum Anji nadamaadum pinju udalaadum Konji vilaiyaadumaa adhu Iru kuvalai vizhiyaagum adhu Male Part Solli theriyaathu solla mudiyaathu Solli theriyaathu solla mudiyaathu Ullaththil iruppathu edhu Varum urakkaththai keduppathu edhu Male Part Vandu nilai pola manathu thadumaara Vandu nilai pola manathu thadumaara Undu suvaippathu madhu Kannil kandu suvaippathu edhu Female Part Kandu kalippaaga kaatchi sezhipaaga Kandu kalippaaga kaatchi sezhipaaga kondu varuvathu adhu Ilam kumari enbathor madhu Male Part Ondril uyiraaga ondru payiraaga Ondril uyiraaga ondru payiraaga Nindru nilaippathu edhu Nenjai kondru mudippathu edhu Female Part Andru mudharkondu indru varai Ingu vanthu malarnthathu adhu Ini vaazhththu tharuvathu adhu Male Part Solli theriyaathu solla mudiyaathu Solli theriyaathu solla mudiyaathu Ullaththil iruppathu edhu Varum urakkaththai keduppathu edhu Aaa……aahaa…..haa…..aaa…. Aa……aaa…..aa…..aaa……aa…..aa….
தமிழ்
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் கௌசல்யா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஆஅ......ஆஹா....ஹா....ஆஅ...... ஆஅ...ஆஅ....ஆ...... ஆண் : சொல்லித் தெரியாது சொல்ல முடியாது சொல்லித் தெரியாது சொல்ல முடியாது உள்ளத்தில் இருப்பது எது வரும் உறக்கத்தை கெடுப்பது எது பெண் : உள்ளம் தடுமாற உலகம் உருமாற உள்ளம் தடுமாற உலகம் உருமாற வெள்ளத்தில் மிதப்பது அது மன வேகத்தில் பிறப்பது அது ஆண் : கொல்லும் மதியாக கொதிக்கும் நதியாக கொல்லும் மதியாக கொதிக்கும் நதியாக கண்ணில் விழுவது எது நெஞ்சில் கவலை தருவது எது பெண் : அஞ்சி நடமாடும் பிஞ்சு உடலாடும் அஞ்சி நடமாடும் பிஞ்சு உடலாடும் கொஞ்சி விளையாடுமா அது இரு குவளை விழியாகும் அது ஆண் : சொல்லித் தெரியாது சொல்ல முடியாது சொல்லித் தெரியாது சொல்ல முடியாது உள்ளத்தில் இருப்பது எது வரும் உறக்கத்தை கெடுப்பது எது ஆண் : வண்டு நிலை போல மனது தடுமாற வண்டு நிலை போல மனது தடுமாற உண்டு சுவைப்பது மது கண்ணில் கண்டு சுவைப்பது எது பெண் : கண்டு களிப்பாக காட்சி செழிப்பாக கண்டு களிப்பாக காட்சி செழிப்பாக கொண்டு வருவது அது இளம் குமரி என்பதோர் மது ஆண் : ஒன்றில் உயிராக ஒன்று பயிராக ஒன்றில் உயிராக ஒன்று பயிராக நின்று நிலைப்பது எது நெஞ்சைக் கொன்று முடிப்பது எது பெண் : அன்று முதற்க்கொன்டு இன்று வரை இங்கு வந்து மலர்ந்தது அது இனி வாழ்த்து தருவது அது இருவர் : சொல்லித் தெரியாது சொல்ல முடியாது சொல்லித் தெரியாது சொல்ல முடியாது உள்ளத்தில் இருப்பது அது வரும் உறக்கத்தை கெடுப்பது அது ஆஅ......ஆஹா....ஹா....ஆஅ...... ஆஅ...ஆஅ....ஆ......ஆஅ......ஆ......ஆ.....
Song information
Singers: A. L. Raghavan and Kausalya
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A. L. Raghavan and Kausalya
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu