Roman script
Singers : S. P. Balasubramanyam and P. Susheela Music by : R. Ramanujam Male Part Siriththaai antha siripil oru mogam Azhaiththaai antha azhaippil oru raagam Kettaai antha kelviyil oru naanam Koduththaai adhai maravaen oru naalum Female Part Siriththaai antha sirippil naan malarnthaen Anaiththaai anatha anaippil naan kaninthaen Kettaai antha kelviyil naan magizhnthaen Koduththaai antha karunaiyil ennai maranthaen Male Part Siriththaai antha siripil oru mogam Female Part Ungalin anbu ninaivinilae En manam vaazhum ulaginilae Kangalin jeeva oliyinilae sorkkam thondrumo Male Part Deviyin paal manam devanin kogulam Deviyin paal manam devanin kogulam Azhagin madiyil vasantham malarum Azhagin madiyil vasantham malarum Female : Aththaan…. Male Part Siriththaai antha siripil oru mogam Male Part Kunguma kolam mugaththinilae Mangala thaali kazhuththinilae Santhana pezhai azhaginilae deivam mayangumo Female Part Kalamae odi vaa kaviyam padi vaa Kalamae odi vaa kaviyam padi vaa Uyiril unarvil kalanthae magizhvom Uyiril unarvil kalanthae magizhvom Male : Anbae Female Part Siriththaai antha sirippil naan malarnthaen Anaiththaai anatha anaippil naan kaninthaen Male : Kettaai antha kelviyil naan magizhnthaen Koduththaai antha karunaiyil ennai maranthaen Both : Siriththaai antha siripil oru mogam….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஆர். ராமானுஜம் ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம் கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம் கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும் பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன் அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன் கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன் கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன் ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் பெண் : உங்களின் அன்பு நினைவினிலே என் மனம் வாழும் உலகினிலே கண்களின் ஜீவ ஒளியினிலே சொர்க்கம் தோன்றுமோ ஆண் : தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம் தேவியின் பால் மணம் தேவனின் கோகுலம் அழகின் மடியில் வசந்தம் மலரும் அழகின் மடியில் வசந்தம் மலரும் பெண் : அத்தான்....... ஆண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம் ஆண் : குங்கும கோலம் முகத்தினிலே மங்கள தாலி கழுத்தினிலே சந்தன பேழை அழகினிலே தெய்வம் மயங்குமோ பெண் : காலமே ஓடி வா காவியம் பாடி வா காலமே ஓடி வா காவியம் பாடி வா உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம் உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம் ஆண் : அன்பே பெண் : சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன் அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன் ஆண் : கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம் கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும் இருவர் : சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
Song information
Singers: S. P. Balasubramanyam and P. Susheela
Music by: R. Ramanujam
Release information: From Ananda Bhairavi (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and P. Susheela
- Film / album: Ananda Bhairavi
- Composer: R. Ramanujam