Roman script

Singer : K. J. Yesudas

Music by : M. S. Vishwanathan

Male Part

Sangeetham en nimmadhi

Aa aa aa aa aa……

Sangeetham en nimmadhi

Female Part

Sanidhanisa sarisanidhani sarigamarikari

Ga mathagama dhani madhanisa thanisa sarisa

Sarisarisarisari sanidhamagarisa

Male Part

Sangeetham en nimmadhi

Sapthaswaram thaanae en sannadhi

Kaiyendhum pon veenai ketkaadhoo en aanai

Idhu thaanae hamsanandhi…ee…ee…

Idhu thaanae hamsanandhi..

Male Part

Maaanodu mazhuvendhi

Mandrathil nindraadum

Marai pottrum parameswaran

Male Part

Marai pottrum parameswaran

Avan thaazh pottri naal dhorum

Sei nandri maravaadha

Vaazh veeran ilangeswaran..

Vaazh veeran ilangeswaran..

Male Part

Sangeetham en nimmadhi…

Female Part

Aaaa….aaa….aaa…..

Male Part

Kadal naangum thaalattum valamaana naadu

Kasthuri maan kootam vilaiyaadum kaadu

Poongaatrum thaandadhu naan potta kodu

Indha puvi vendhan nana aagum enakku yedhu eedu

Male Part

Sangeetham en nimmadhi…

Male Part

Mayilae thogai ila mayilae

Female : Sariga magarisani sariga

Male : Paruva maeni bharatham aada

Padhamum paada

Vizhiyil ezhudhum kavidhai yaavum

Isai muzhangha

Female : Ga ma ga thatha madhama ni ni

Thanitha saa saa

Nisanidhanidha madhmagarisani sa ri ga

Male Part

Vanna thaamarai aadai soodi vara

Vanji poongodi jaadai pesi vara

Vizhikkul pirakkum mayakkam

Male Part

Kattu poonguzhal kaattril neendhi vara

Inba kaaviyam kannil yendhi vara

Kalaikor vilakkam kidaikkum

Male Part

Naan vaazhum manimaadam

Aanandha kalaikoodam ooyadha sandhosamae

Vaan vaazhum devarkkum vaaikkadhu ennaalum

Naan kaanum sowbakkiyamae…ae….

Male Part

Sangeetham en nimmadhi

Sapthaswaram thanaae en sannidhi…ee…ee…ee…

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : சங்கீதம் என் நிம்மதி...ஆஆஆஆ....

சங்கீதம் என் நிம்மதி

பெண் : ஸநிதநிஸ ஸரிஸநிதநி ஸரிகமரிகரி

கமதகமதநி மதநிஸ தநிஸ ஸரிசா

ஸரிஸரிஸரிஸரி ஸநிதமகரிஸா

ஆண் : சங்கீதம் என் நிம்மதி.....

சப்தஸ்வரம் தானே என் சன்னிதி

கையேந்தும் பொன் வீணை

கேட்காதோ என் ஆணை

இதுதானே ஹம்சாநந்தி

இதுதானே ஹம்சாநந்தி

ஆண் : மானோடு மழுவேந்தி மன்றத்தில் நின்றாடும்

மறைப் போற்றும் பரமேஸ்வரன்

ஆண் : மறைப் போற்றும் பரமேஸ்வரன்

அவன் தாள் போற்றி நாள் தோறும்

செய்நன்றி மறவாத வாள் வீரன் இலங்கேஸ்வரன்

வாள் வீரன் இலங்கேஸ்வரன்

ஆண் : சங்கீதம் என் நிம்மதி........

பெண் : ஆ...ஆ...ஆ...ஆ....

ஆண் : கடல் நான்கும் தாலாட்டும் வளமான நாடு

கஸ்தூரி மான் கூட்டம் விளையாடும் காடு

பூங்காற்றும் தாண்டாது நான் போட்ட கோடு

இந்த புவி வேந்தன் நானாகும் எனக்கேது ஈடு

ஆண் : சங்கீதம் என் நிம்மதி.....

ஆண் : மயிலே...தோகை இள மயிலே

பெண் : ஸரிக மகரிஸநி ஸரிக

ஆண் : பருவ மேனி பரதமாட பதமும் பாட

விழியில் எழுதும் கவிதை யாவும் இசை முழங்க

பெண் : கமகதாத மதமநிநி தநிதசாஸ

நிஸநிதநித மதமகரிஸநி ஸரிக

ஆண் : வண்ணத் தாமரை ஆடை சூடி வர

வஞ்சிப் பூங்கொடி ஜாடைப் பேசி வர

விழிக்குள் பிறக்கும் மயக்கம்

ஆண் : கட்டுப் பூங்குழல் காற்றில் நீந்தி வர

இன்பக் காவியம் கண்ணில் ஏந்தி வர

கலைக்கோர் விளக்கம் கிடைக்கும்

ஆண் : நான் வாழும் மணிமாடம்

ஆனந்த கலைக்கூடம் ஓயாத சந்தோஷமே

வான் வாழும் தேவர்க்கும் வாய்க்காது எந்நாளும்

நான் காணும் சௌபாக்கியமே

ஆண் : சங்கீதம் என் நிம்மதி

சப்தஸ்வரம் தானே என் சன்னிதி....

Song information

Singer: K. J. Yesudas

Music by: M. S. Vishwanathan

Release information: From Ilangeswaran (1987) · Lyricist: Vaali

Explore this song