Roman script
Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Vaali Female Part Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Indru kadhaiyaaga vilaipogum kadai sarakku Enna solla yaedhu solla Enna solla yaedhu solla Vetkkakedu veliyil solla Female Part Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Female Part Manjalodum manamaalaiyodum Manaiviyendru naan sendra neram Nenjil ninaithaen pudhu veedu endru Nenjil ninaithaen pudhu veedu endru Neril kandaen podhu veedu endru Female Part Kelikku porulaanaen Avan kelvikku idamaanaan Enna solla yaedhu solla Vetkkakkedu veliyil solla Female Part Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Female Part Vaazhvu thodangum mudhal naalin iravu Vasanthamalla naan paarththa uravu Muthatham sintha edhirpaarththu nindraen Muthatham sintha edhirpaarththu nindraen Madhuvai eduththaan idhazhoram vaarththaan Idhzhoram vaarththaan Female Part Mayakkaththil aazhththi vittaan Manam pola aatti vaithathaan Enna solla yaedhu solla Vetkkakkedu veliyil solla Female Part Samuthaaya veedhiyilae naan sigappu vilakku Female Part Ennai eduthaen virunthaaga vaithaen Virunthai eduthaan vilaikku koduththaan Kattiya thaali oruvanukendraen Kattiya thaali oruvanukendraen Kattil paavai varupavarkendraan Female Part Naalum izhanthu vittaen Indru nadai pinam aagi vittaen Nadai pinam aagi vittaen Enna solla yaedhu solla Vetkkakkedu veliyil solla Female Part Samuthaaya veedhiyilae naan sigappu vilakku
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு இன்று கதையாக விலைபோகும் கடை சரக்கு என்ன சொல்ல ஏது சொல்ல என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு பெண் : மஞ்சளோடும் மணமாலையோடும் மனைவியென்று நான் சென்ற நேரம் நெஞ்சில் நினைத்தேன் புது வீடு என்று நெஞ்சில் நினைத்தேன் புது வீடு என்று நேரில் கண்டேன் பொது வீடு என்று பெண் : கேலிக்கு பொருளானேன் அவன் கேள்விக்கு இடமானான் என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல..... பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு பெண் : வாழ்வு தொடங்கும் முதல் நாளின் இரவு வசந்தமல்ல நான் பார்த்த உறவு முத்தம் சிந்த எதிர்ப்பார்த்து நின்றேன் முத்தம் சிந்த எதிர்ப்பார்த்து நின்றேன் மதுவை எடுத்தான் இதழோரம் வார்த்தான் இதழோரம் வார்த்தான் பெண் : மயக்கத்தில் ஆழ்த்தி விட்டான் மனம் போல ஆட்டி வைத்தான் என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல...... பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு பெண் : என்னை எடுத்தேன் விருந்தாக வைத்தேன் விருந்தை எடுத்தான் விலைக்கு கொடுத்தான் கட்டிய தாலி ஒருவனுக்கென்றேன் கட்டிய தாலி ஒருவனுக்கென்றேன் கட்டில் பாவை வருபவர்க்கென்றான் பெண் : நாலும் இழந்து விட்டேன் இன்று நடைப் பிணம் ஆகி விட்டேன் நடைப் பிணம் ஆகி விட்டேன் என்ன சொல்ல ஏது சொல்ல வெட்கக்கேடு வெளியில் சொல்ல பெண் : சமுதாய வீதியிலே நான் சிகப்பு விளக்கு
Song information
Singer: P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Raja Naagam (1974) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Raja Naagam
- Composer: V. Kumar
- Lyricist: Vaali