Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Whistling : …………………………. Male Part Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Iraivan buthiyai koduthaanae Adhil poiyum purattum thiruttum kalandhu Boomiyai keduthaanae Manidhan boomiyai keduthaanae Male Part Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Male Part Kangal irandil arul irukkum Sollum karuthinil aayiram porul irukkum Ullathil poiyae niraindhirukkum Adhu udan pirandhoraiyum karuvarukkum Male Part Paayum puliyin kodumaiyai Iraivan paarvaiyil vaithaanae Puliyin paarvaiyil vaithaanae Indha paazhum manidhan Gunangalai mattum Porvaiyil maraithaanae Idhaya porvaiyil maraithaanae Male Part Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Whistling : ……………………… Male Part Kaigalai tholil podugiraan Adhai karunai endravan koorugiraan Kaigalai tholil podugiraan Adhai karunai endravan koorugiraan Paigalil edhaiyo thaedugiraan Kaiyil pattadhai eduthu odugiraan Male Part Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae Iraivan buthiyai koduthaanae Adhil poiyum purattum thiruttum kalandhu Boomiyai keduthaanae Manidhan boomiyai keduthaanae Male Part Poyum poyum manidhanukkindha Buthiyai koduthaanae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் விசில் : .............................................. ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே ஆண் : கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் கண்கள் இரண்டில் அருள் இருக்கும் சொல்லும் கருத்தினில் ஆயிரம் பொருள் இருக்கும் உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது உடன் பிறந்தோரையும் கரு அறுக்கும் ஆண் : பாயும் புலியின் கொடுமையை இறைவன் பார்வையில் வைத்தானே புலியின் பார்வையில் வைத்தானே இந்த பாழும் மனிதன் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே இதய போர்வையில் மறைத்தானே ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே விசில் : .............................................. ஆண் : கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் கைகளை தோளில் போடுகிறான் அதை கருணை என்றவன் கூறுகிறான் பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான் ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே இறைவன் புத்தியை கொடுத்தானே அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து பூமியைக் கெடுத்தானே மனிதன் பூமியை கெடுத்தானே ஆண் : போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Thaai Sollai Thattadhe (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Thaai Sollai Thattadhe
- Composer: K. V. Mahadevan