Roman script
Singer : T. R. Mahalingam Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Male Part Yen endru ketkavae aal illai enbathaalae Thaan endra agangaaram thalai virithu aaduthada Oonuruga ezhaigalin ullam ellaam punaaga Uyirodu kolbavanai kaalam uyarvaai madhikuthada…aa..aa.. Male Part Porumai orunaal pongi ezhundhaal boomi nadungumada Kodumai puriyum paadhaganai avan kuraigal vizhungamada Kodumai puriyum paadhaganai avan kuraigal vizhungamada Male Part Porumai orunaal pongi ezhundhaal boomi nadungumada Male Part Kaalaiyaagi madhiyamaagi maalaiyaanadhu pala poludhu Maalaiyaagi pagalum mudinthu Irulum ponadhu pala iravu Gnyaalam muluvadhumae aalgindra kadhiron Vaazhvellam oru naal vaazhvadhendraal Dhinam theeradha veriyodu Poraadum manidhan Per aasai nilaithanai enendru solven Male Part Porumai orunaal pongi ezhundhaal boomi nadungumada Male Part Maanam endrae mangai azhudhaal Inbamendrae nagaippaanae Vazhavayadhil seidha vinaiyai Vaazhvu mudivil ninaipaanae Male Part Thaanaaga sirippaan thaanaaga aluvaan Kaanadha kanavum kaanbaanae Avan aanaandha vaazhvendru eenangal thedi Koonaagi oonaagi koodaagi poovaan Male Part Porumai orunaal pongi ezhundhaal boomi nadungumada Kodumai puriyum paadhaganai avan kuraigal vizhungamada
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆண் : ஏனென்று கேட்கவே ஆளில்லை என்பதாலே தானென்ற அகங்காரம் தலைவிரித்து ஆடுதடா ஊனுருக ஏழைகளின் உள்ளமெல்லாம் புண்ணாக உயிரோடு கொல்பவனைக் காலம் உயர்வாய் மதிக்குதடா.ஆஅ .. ஆண் : பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா ஆண் : பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா ஆண் : காலையாகி மதியமாகி மாலையானது பல பொழுது, மாலையாகி பகலும் முடிந்து இருளும் போனது பல இரவு ஞாலம் முழுவதுமே ஆள்கின்ற கதிரோன் வாழ்வெல்லாம் ஒரு நாள் வாழ்வென்றதால் தினம் தீராத வெறியோடு போராடும் மனிதன் பேராசை நிலைதனை என்னென்று சொல்வேன்! ஆண் : பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா ஆண் : மானம் என்றே மங்கை அழுதால் இன்பமென்றே நகைப்பானே வால வயதில் செய்த வினையை வாழ்வு முடிவில் நினைப்பானே ஆண் : தானாகச் சிரிப்பான் தானாக அழுவான் காணாத கனவும் காண்பானே அவன் ஆனந்த வாழ்வென்று ஈனங்கள் தேடித் கூனாகி ஊனாகிக் கூடாகிப் போவானே ஆண் : பொறுமை ஒருநாள் பொங்கி எழுந்தால் பூமி நடுங்குமடா கொடுமை புரியும் பாதகனை அவன் குறைகள் விழுங்குமடா
Song information
Singer: T. R. Mahalingam
Music by: Vishwanathan – Ramamurthy
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Rathinapuri Ilavarasi (1960) · Singer: T. R. Mahalingam · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Rathinapuri Ilavarasi
- Composer: Vishwanathan – Ramamurthy
- Lyricist: Pattukottai Kalyanasundaram