Roman script
Singer : T. R. Mahalingam Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Vindhiyam kumari idai Vilangum thirunaadae ..ae…..ae….aaa… Velendhum moovendhar aandirundha thennaadae Engal dhraavida ponnaadae… ae… Male Part Engal dhraavida ponnaadae… Kalai vaazhum thennaadae… ae.. Engal dhraavida ponnaadae… Kalai vaazhum thennaadae… Male Part Iyal isai naadagam Aram porul inbam Vilangum senthamizh naadae Engal dhraavida ponnaadae… Kalai vaazhum thennaadae… Male Part Sariththiram paadum kaaveri Ilam thalirkodi polae odugiraal Sangam valarndha madhuraiyilae Engal thamizh magal Thamizh isai paadugiraal Male Part Vizhigalai polae kumariyin melae Meen magal thulli aadugiraal Vilaiyaadum vaigai azhiyaadha poigai Dhisai dhorum isai paadum thaai naadae Male Part Engal dhraavida ponnaadae… Kalai vaazhum thennaadae… Male Part Singala theevin kadarkkaraiyai Engal senthamizh thozhar Azhagu seidhaar Egipthiyar naattin nadhikkaraiyil Engal ilam thamizh veerar Bhavani vandhaar Male Part Villavan chaeran paandiya naattin Vel vizhi magalai manam mudiththaan Vilaigindra selvam valargindra thangam Dhisai dhorum isai paadum thaai naadae Male Part Engal dhraavida ponnaadae… Kalai vaazhum thennaadae… Iyal isai naadagam Aram porul inbam Vilangum senthamizh naadae Engal dhraavida ponnaadae… Kalai vaazhum thennaadae…
தமிழ்
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே......ஏ....ஏ....ஆஅ.... வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே....ஏ.... ஆண் : எங்கள் திராவிடப் பொன்னாடே...... கலை வாழும் தென்னாடே....ஏ.... எங்கள் திராவிடப் பொன்னாடே...... கலை வாழும் தென்னாடே ஆண் : இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விலங்கும் செந்தமிழ் நாடே எங்கள் திராவிடப் பொன்னாடே...... கலை வாழும் தென்னாடே ஆண் : சரித்திரம் பாடும் காவேரி இளம் தளிர்க்கொடி போலே ஓடுகிறாள் சங்கம் வளர்த்த மதுரையிலே எங்கள் தமிழ் மகள் தமிழிசை பாடிகிறாள் ஆண் : விழிகளைப் போலே குமரியின் மேலே மீன் மகள் துள்ளி ஆடுகிறாள் விளையாடும் வைகை அழியாத பொய்கை திசைதோறும் இசை பாடும் தாய்நாடே ஆண் : எங்கள் திராவிடப் பொன்னாடே...... கலை வாழும் தென்னாடே..... ஆண் : சிங்களத் தீவின் கடற்கரையை எங்கள் செந்தமிழ்த் தோழர் அழகு செய்தார் எகிப்திய நாட்டின் நதிக்கரையில் எங்கள் இளந்தமிழ் வீரர் பவனி வந்தார் ஆண் : வில்லவன் சேரன் பாண்டிய நாட்டின் வேல்விழி மகளை மணமுடித்தான் விளைகின்ற செல்வம் வளர்கின்ற தங்கம் திசைதோறும் இசை பாடும் தாய்நாடே ஆண் : எங்கள் திராவிடப் பொன்னாடே...... கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விலங்கும் செந்தமிழ் நாடே எங்கள் திராவிடப் பொன்னாடே...... கலை வாழும் தென்னாடே......
Song information
Singer: T. R. Mahalingam
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy