Roman script

Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female Part

Pesakoodadhu yaarum pesakoodadhu

Maganae magane kannurangu

Mazhalai kizhiyae kannurangu

Kanavum varaamal amaidhi kedaamal

Kannae nee urangu konjam unnai nee maranthu

Female Part

Kasthuri maan ondru kannurangum neram

Kaarkaala megangal thaalattu paadum usshh

Pesakoodadhu yaarum pesakoodadhu

Female Part

Naadaalum raajaangam unnai vandhu thedum

Paaratti tholodu poomaalai soodum

Pattaalam nee sollum kattalaiyai ketkum

Paasathil en kangal panneerai vaarkkum

Ezhu jenmangal vaazhum indha inbangal

Female Part

Maganae magane kannurangu

Mazhalai kizhiyae kannurangu

Kanavum varaamal amaidhi kedaamal

Kannae nee urangu konjam unnai nee maranthu

Aariraariro aariraariroo aariraariroo aariraariroo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது

மகனே மகனே கண்ணுறங்கு

மழலை கிளியே கண்ணுறங்கு

கனவும் வராமல் அமைதி கெடாமல்

கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

பெண் : கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம்

கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்...

பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது

பெண் : நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும்

பாராட்டி தோளோடு பூமாலை சூடும்

பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும்

பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும்

ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள்

பெண் : மகனே மகனே கண்ணுறங்கு

மழலை கிளியே கண்ணுறங்கு

கனவும் வராமல் அமைதி கெடாமல்

கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

ஆரிராரிரோ ஆரிராரிரோ ஆரிராரிரோ....ஆரிராரிரோ....

Song information

Singer: P. Susheela

Music by: M. S. Vishwanathan

Release information: From Varam (1989) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan

Explore this song