Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Nil angae….. Nil angae nil angae nil angae Enna un idhayam enna un thiyaagam Engae selgindraai Enna un idhayam enna un thiyaagam Engae selgindraai Female Part Ini aval ullam thudittidum velai Ingae nirkkindraai…aa…aaa…aaa…aaiii… Engae selgindraai Female Part Karunaiyudan thaali Kazhuthai thazhuvi nirkkum Kaigalil pon valaigal Kaarigaiyai thazhuvum Aadai aval azhagai Anbodu thazhuvi nirkkum Aadai aval azhagai Anbodu thazhuvi nirkkum Arivirundhum unnidathil Andha karunai siridhum illai Engae selgindraai Female Part Unbadharkku thandhaalum Udai uduthi vittaalum Alli koduthaalum Archanaigal seidhaalum Athanaikkum melae Pathinikku thaevai ondru Athanaikkum melae Pathinikku thaevai ondru Ariyaaiyo… ariyaaiyo padithirundhu Ariyum ullam unakkillaiyo Engae selgindraai Female Part Allum pagalum Arugae thunaiyirundhu Sollaal udalaal uyiraal suvai koduthu Sellum varaiyilum serndhirukkum Perumaiyai thaan Thiyaagam enbaar thiyaagam enbaar Maalai mattum sootti vittaal Thiyaagiyaaga mudiyumaa Engae selgindraai Female Part Enna un idhayam enna un thiyaagam Engae selgindraai Female Part Kannizhandha mangaikku Kanneer perukkeduthaal… Kana pozhudhil un thiyaagam Karugi vidum maravaadhae… Moodi kidakkindra mana kadhavai Thirandhu vidu… Thirandhu kidakkindra Kadhavugalai moodi vidu… Female Part Manam kulira paadi vidu Mangaikku vaazhvu kodu Manidha vadivilae Dheivamaai maari vidu…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : நில் அங்கே....... நில் அங்கே நில் அங்கே நில் அங்கே என்ன உன் இதயம் என்ன உன் தியாகம் எங்கே செல்கின்றாய் என்ன உன் இதயம் என்ன உன் தியாகம் எங்கே செல்கின்றாய் பெண் : இனி அவள் உள்ளம் துடித்திடும் வேளை எங்கே நிற்கின்றாய்.....ஆஆ...ஆஅ...ஆஅ.....அஆய் எங்கே செல்கின்றாய் பெண் : கருணையுடன் தாலி கழுத்தை தழுவி நிற்கும் கைகளில் பொன் வளைகள் காரிகையைத் தழுவும் ஆடை அவள் அழகை அன்போடு தழுவி நிற்கும் அறிவிருந்தும் உன்னிடத்தில் அந்தக் கருணை சிறிதும் இல்லை எங்கே செல்கின்றாய் பெண் : உண்பதற்கு தந்தாலும் உடை உடுத்தி விட்டாலும் அள்ளிக் கொடுத்தாலும் அர்ச்சனைகள் செய்தாலும் அத்தனைக்கும் மேலே பத்தினிக்குத் தேவையொன்று அறியாயோ......அறியாயோ படித்திருந்தும் அறியும் உள்ளம் உனக்கில்லையோ எங்கே செல்கின்றாய் பெண் : அல்லும் பகலும் அருகே துணையிருந்து சொல்லால் உடலால் உயிரால் சுவை கொடுத்து செல்லும் வரையிலும் சேர்ந்திருக்கும் பெருமையைத்தான் தியாகம் என்பார் மாலை மட்டும் சூட்டிவிட்டால் தியாகியாக முடியுமா எங்கே செல்கின்றாய் பெண் : என்ன உன் இதயம் என்ன உன் தியாகம் எங்கே செல்கின்றாய் பெண் : கண்ணிழந்த மங்கைக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தால்..... கணப் பொழுதில் உன் தியாகம் கருகி விடும் மறவாதே..... மூடிக் கிடக்கின்ற மனக் கதவைத் திறந்து விடு.... திறந்து கிடக்கின்ற கதவுகளை மூடி விடு.... பெண் : மனங்குளிரப் பாடி விடு மங்கைக்கு வாழ்வு கொடு மனித வடிவினிலே தெய்வமாய் மாறி விடு......
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kumudham
- Composer: K. V. Mahadevan