Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela
Music by : M.S. Viswanathan
Male Part
{ Naan paarthadhilae
Aval oruthiyai thaan nalla
Azhagiyenben nalla azhagiyenben } (2)
Male Part
{ Naan kettadhilae
Aval vaarthaiyai thaan
Oru kavidhaiyenben
Oru kavidhaiyenben } (2)
Male Part
Naan paarthadhilae
Aval oruthiyai thaan nalla
Azhagiyenben nalla azhagiyenben
Male Part
{ Endha kalaignanum
Avalai silai vadipaan
Endha pulavanum
Avalai paatil vaipaan } (2)
Male Part
Andha iyarkaiyum
Aval mel kaadhal kollum
Aval ninaivaalae en
Kaalam sellum
Male Part
Naan paarthadhilae
Aval oruthiyai thaan nalla
Azhagiyenben nalla azhagiyenben
Male Part
Idaiyo illai
Irundhaal mullai kodi
Pol mella valaiyum
Male Part
Chinna kudai pol
Viriyum imaiyum vizhiyum
Paarthaal aasai vilaiyum
Male Part
Andha poo magal
Thirumugam melae
Kulir punnagai varuvadhanaalae
Nilavo malaro edhuvo
Male Part
Naan paarthadhilae
Aval oruthiyai thaan nalla
Azhagiyenben nalla azhagiyenben
Male Part
Naan kettadhilae
Aval vaarthaiyai thaan
Oru kavidhaiyenben
Oru kavidhaiyenben
Female Part
{ Oru naal illai
Oru naal vandhu
Avaldhaan solla thudithaal } (2)
Female Part
{ Uyir neeyae
Endru ninaithaal indru
Kannaal solli mudithaal } (2)
Female Part
Andha kaadhalan
Mugam thoduvaano
Indha kaadhali sugam peruvaalo
Kanavo nanavo edhuvo
Female Part
Naan paarthadhilae
Un oruvanai thaan nalla
Azhagan enben nalla
Azhagan enben
Female Part
Naan kettadhilae
Un vaarthaiyai thaan oru
Kavidhaiyenben oru kavidhaiyenben
Female Part
Naan paarthadhilae
Un oruvanai thaan
Nalla azhagan enben
Nalla azhagan enbenதமிழ்
பாடகி : பி.சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன் } (2)
ஆண் : { நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன் } (2)
ஆண் : நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
ஆண் : { எந்தக் கலைஞனும்
அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப்
பாட்டில் வைப்பான் } (2)
ஆண் : அந்த இயற்கையும்
அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம்
செல்லும்
ஆண் : நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
ஆண் : இடையோ இல்லை
இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல
வளையும்
ஆண் : சின்னக்
குடை போல் விரியும்
இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
ஆண் : அந்தப் பூமகள்
திருமுகம் மேலே
குளிர்ப் புன்னகை
வருவதினாலே நிலவோ
மலரோ எதுவோ
ஆண் : நான் பார்த்ததிலே
அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல
அழகி என்பேன்
ஆண் : நான் கேட்டதிலே
அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்
பெண் : { ஒரு நாள் இல்லை
ஒரு நாள் வந்து அவள் தான்
சொல்லத் துடித்தாள் } (2)
பெண் : { உயிர் நீயே
என்று நினைத்தாள்
இன்று கண்ணால்
சொல்லி முடித்தாள் } (2)
பெண் : அந்தக் காதலன்
முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம்
பெறுவாளோ கனவோ
நனவோ எதுவோ
பெண் : நான் பார்த்ததிலே
உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன்
நல்ல அழகன் என்பேன்
பெண் : நான் கேட்டதிலே
உன் வார்த்தையைத் தான்
ஒரு கவிதை என்பேன்
ஒரு கவிதை என்பேன்
பெண் : நான் பார்த்ததிலே
உன் ஒருவனைத் தான்
நல்ல அழகன் என்பேன்
நல்ல அழகன் என்பேன்Song information
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Anbe Vaa
- Composer: M.S. Viswanathan