Roman script

Singer : P. Susheela

                              Music by : M.S. Viswanathan

Female Part

{ Maalai

Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi } (2)

Female Part

Manadhil

Irundhum vaarthaigal

Illai kaaranam yen thozhi

Kaaranam yen thozhi aa aa aa

Female Part

Maalai

Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

Female Part

Inbam silanaal

Thunbam silanaal endravar

Yaar thozhi

Female Part

Inbam kanavil

Thunbam ethiril kaanbathu

Yen thozhi kaanbathu yen

Thozhi aa aa aa

Female Part

Maalai

Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

Female Part

Manamudithavar

Pol aruginilae oar vadivu

Kanden thozhi mangai en

Kaiyil kungumam thandhaar

Maalai ittaar thozhi

Female Part

Vazhi

Marantheno vandhavar

Nenjil saainthuvitten thozhi

Female Part

Avar

Maraven maraven

Endrar udanae marandhu

Vittar thozhi paranthu

Vittar thozhi aa aa aa

Female Part

Maalai

Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

Female Part

Kanavil

Vanthavar yarena keten

Kanavar endrar thozhi

Female Part

Kanavar

Endral avar kanavu

Mudinthadhum pirinthadhu

Yen thozhi

Female Part

Ilamai ellam

Verum kanavu mayam

Idhil marainthadhu sila kaalam

Female Part

Thelivum

Ariyathu mudivum

Theriyathu mayankuthu ethirkaalam

Mayankuthu ethirkaalam aa aa aa

Female Part

Maalai

Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

Female Part

Manadhil

Irundhum vaarthaigal

Illai kaaranam yen thozhi

Kaaranam yen thozhi aa aa aa

Female Part

Maalai

Pozhuthin mayakathilae

Naan kanavu kanden thozhi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { மாலை பொழுதின்

மயக்கத்திலே நான் கனவு

கண்டேன் தோழி } (2)

பெண் : மனதில் இருந்தும்

வார்த்தைகள் இல்லை

காரணம் ஏன் தோழி

காரணம் ஏன் தோழி

ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்

மயக்கத்திலே நான் கனவு

கண்டேன் தோழி

பெண் : இன்பம் சிலநாள்

துன்பம் சிலநாள் என்றவர்

யார் தோழி

பெண் : இன்பம் கனவில்

துன்பம் எதிரில் காண்பது

ஏன் தோழி காண்பது ஏன்

தோழி ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்

மயக்கத்திலே நான் கனவு

கண்டேன் தோழி

பெண் : மணமுடித்தவர்

போல் அருகினிலே ஓர்

வடிவு கண்டேன் தோழி

மங்கை என் கையில்

குங்குமம் தந்தார் மாலை

இட்டார் தோழி

பெண் : வழி மறந்தேனோ

வந்தவர் நெஞ்சில் சாய்ந்து

விட்டேன் தோழி

பெண் : அவர் மறவேன்

மறவேன் என்றார் உடனே

மறந்து விட்டார் தோழி

பறந்து விட்டார் தோழி

ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்

மயக்கத்திலே நான் கனவு

கண்டேன் தோழி

பெண் : கனவில் வந்தவர்

யாரென கேட்டேன் கணவர்

என்றார் தோழி

பெண் : கணவர் என்றால்

அவர் கனவு முடிந்ததும்

பிரிந்தது ஏன் தோழி

பெண் : இளமை எல்லாம்

வெறும் கனவு மயம் இதில்

மறைந்தது சில காலம்

பெண் : தெளிவும் அறியாது

முடிவும் தெரியாது மயங்குது

எதிர்காலம் மயங்குது

எதிர்காலம் ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்

மயக்கத்திலே நான் கனவு

கண்டேன் தோழி

பெண் : மனதில் இருந்தும்

வார்த்தைகள் இல்லை

காரணம் ஏன் தோழி

காரணம் ஏன் தோழி

ஆ ஆ ஆ

பெண் : மாலை பொழுதின்

மயக்கத்திலே நான் கனவு

கண்டேன் தோழி

Song information

Singer: P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan

Explore this song