Roman script

Singers : T.M. Soundararajan and Shoba

Music by : M.S. Viswanathan

Male Part

Maharaja

Oru maharani

Indha iruvarukum

Ival kuttirani

Female Part

Kuttirani…

Male Part

Maharaja

Oru maharani

Indha iruvarukum

Ival kuttirani

Male Part

Pongum

Azhagil thanga

Nilavil thangachi paapavo

Male Part

Putham

Puthiya poochendaatam

Punnagai seivaalo

Female Part

Ammamma…

Male Part

Maharaja

Oru maharani

Indha iruvarukum

Ival kuttirani

Male Part

Malargalellam

Ivalukendrae maaligai

Amaithadhamma

Male Part

Maalai thendral

Sonnadhai ketum mandhiri

Aanadhamma

Male Part

Poonaiyum

Naayum kaaval

Kaakum senaigal aanadhamma

Male Part

Amma appa

Madimel ivalin rajaangam

Nadakudhamma

Female Part

Ammamma…

Male Part

Maharaja

Oru maharani

Indha iruvarukum

Ival kuttirani

Female Part

Yaradhu

Ingae mandhiri kutti

Rani vandhaalae endhiri

Male Part

{ Vanakkam } (4)

Chinna rani ingu enakitta

Kattalai enna rani

Female Part

{ Oodi

Pidithu vilaiyada

Oru thambipaapa vendum

Enkooda } (2)

Male Part

Aagatum

Thaayae adhupolae

Neengal ninaithadhai

Mudipen manampolae

Male Part

Ivalukoru

Thambipayal inimel

Pirapano ilavarasan

Naandhaan endru

Pottiku varuvaano

தமிழ்

பாடகி : ஷோபா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : மகராஜா ஒரு

மகராணி இந்த இருவருக்கும்

இவள் குட்டி ராணி

பெண் : குட்டி ராணி

ஆண் : மகராஜா ஒரு

மகராணி இந்த இருவருக்கும்

இவள் குட்டி ராணி

ஆண் : பொங்கும் அழகில்

தங்க நிலவில் தங்கச்சி

பாப்பாவோ புத்தம் புதிய

பூச்செண்டாட்டம்

புன்னகை செய்வாளோ

பெண் : அம்மம்மா

ஆண் : மகராஜா ஒரு

மகராணி இந்த இருவருக்கும்

இவள் குட்டி ராணி

ஆண் : மலர்களெல்லாம்

இவளுக்கென்றே மாளிகை

அமைத்ததம்மா மாலைத்

தென்றல் சொன்னதை

கேட்டும் மந்திரி ஆனதம்மா

ஆண் : பூனையும் நாயும்

காவல் காக்கும் சேனைகள்

ஆனதம்மா அம்மா அப்பா

மடி மேல் இவளின் ராஜாங்கம்

நடக்குதம்மா

பெண் : அம்மம்மா

ஆண் : மகராஜா ஒரு

மகராணி இந்த இருவருக்கும்

இவள் குட்டி ராணி

பெண் : யாரது இங்கே

மந்திரி குட்டி ராணி

வந்தாலே எந்திரி

ஆண் : { வணக்கம் } (4)

சின்ன ராணி இங்கு

எனக்கிட்ட கட்டளை

என்ன ராணி

பெண் : { ஓடி பிடித்து

விளையாட ஒரு தம்பி

பாப்பா வேண்டும்

என் கூட } (2)

ஆண் : ஆகட்டும்

தாயே அது போல

நீங்கள் நினைத்ததை

முடிப்பேன் மனம் போலே

ஆண் : இவளுக்கொரு

தம்பி பயல் இனி மேல்

பிறப்பானோ இளவரசன்

நான் தான் என்று போட்டிக்கு

வருவானோ

Song information

Singers: T.M. Soundararajan and Shoba

Music by: M.S. Viswanathan

Release information: From Iru Malargal (1967) · Lyricist: Lyricist Not Known

Explore this song