Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Male Part Paavathai kandaal vilagi vidu Paadhaiyai paarthu nadandhu vidu Paavathai kandaal vilagi vidu Paadhaiyai paarthu nadandhu vidu Aabathai sandhikka thunindhu vidu Azhuvadhai mattum marandhu vidu Male Part Aarathi vilakkum Naadhathin oliyum Aalaya maniyum neeyae neeyae Male Part Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Male Part Kollum kolgaiyil kurangaaga Kodumaiyai kandaal puliyaaga Kollum kolgaiyil kurangaaga Kodumaiyai kandaal puliyaaga Kuri vaithu paarppadhil kokkaaga Gunathil yaanaiyin vadivaaga Male Part Aadidum maanum Aanandha mayilum Pesidum kiiyum neeyae neeyae Male Part Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Male Part Thandhai koduthadhu thaayidamae Thaayaar koduthadhu ennidamae Thandhai koduthadhu thaayidamae Thaayaar koduthadhu ennidamae Annai iruppadhu thani idamae Aayinum aval manam unnidamae Male Part Kodai nizhalum Vaadai kanalum Gopura vilakkum neeyae neeyae Female Part Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae Kelaai maganae keloru vaarthai Naalaiya ulagin naayagan neeyae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே ஆண் : பாவத்தைக் கண்டால் விலகிவிடு பாதையைப் பார்த்து நடந்து விடு பாவத்தைக் கண்டால் விலகிவிடு பாதையைப் பார்த்து நடந்து விடு ஆபத்தை சந்திக்க துணிந்துவிடு அழுவதை மட்டும் மறந்து விடு ஆண் : ஆரத்தி விளக்கும் நாதத்தின் ஒலியும் ஆலயமணியும் நீயே.....நீயே..... ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே ஆண் : கொள்ளும் கொள்கையில் குரங்காக கொடுமையைக் கண்டால் புலியாக கொள்ளும் கொள்கையில் குரங்காக கொடுமையைக் கண்டால் புலியாக குறி வைத்து பார்ப்பதில் கொக்காக குணத்தில் யானையின் வடிவாக ஆண் : ஆடிடும் மானும் ஆனந்த மயிலும் பேசிடும் கிளியும் நீயே.........நீயே...... ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே ஆண் : தந்தை கொடுத்தது தாயிடமே தாயார் கொடுத்தது என்னிடமே தந்தை கொடுத்தது தாயிடமே தாயார் கொடுத்தது என்னிடமே அன்னை இருப்பது தனியிடமே ஆயினும் அவள் மனம் உன்னிடமே ஆண் : கோடை நிழலும் வாடை கனலும் கோபுர விளக்கும் நீயே.........நீயே..... பெண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Uthaman (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Uthaman
- Composer: K. V. Mahadevan