Roman script

Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Female Part

Kannazhagil mannulagai aada vaippaen

En kaalazhagil unnai vendru ooda vaippaen

Jaadhiyaa padhamaa thagathimi thaamenum nadamaa

Ennazhagil unnai vendru aada vaippaen

Nee en madiyilae vizhunthu aada vaippaen

Padhamaa padhamaa idhu bharatha naattiya vadhamaa…

Female Part

Kannanukku kayilundu pullaanguzhal

Kaamanukku kayilundu panjapaanam

Unnidaththil enna undu vaaththiyaarae

Unnai oda oda naanadippaen aadippaaru

Female Part

Saelai kattum pengalukku naanam vendum

Naan thedi thedi paarththuvittaen angae kaanom

Yaaridaththil savaal vittaai pottu paaru

Nee arinthu vantha aththanaiyum kaatti paaru

Female Part

Nadai ketta kettukku naattiyam veraa

Adangattum un aattam

Un nadanaththai paarththaal kalai kettu pogum

Udambae peyaattam….

Female Part

Yaedhu kettu ponaal enakennadi

Adi adangattum vaalaattam

Naan izhukkira izhuppil mithikkira midhiyil

Podipadum un aattam

Female Part

Ennidam ullathu ennavendru neeyarinthu

Unnidaththil ullavattrai kaattalaam

Aadi kaattalaam

Female Part

Idhuvaraikkum vantha pinbu

Idhula mattum enna ambu

Aadadi kaalai podadi

Mudiyum mattum moodi paarththu

Vidiyum mattum aadi paarththu solladi

Vanthu nilladi

Female Part

Keli pechchu thappu endru

Tholvi thannai oppu kondu

Kenjadi ennai konjadi…..

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பெண் : கண்ணழகில் மண்ணுலகை ஆட வைப்பேன்

என் காலழகில் உன்னை வென்று ஓட வைப்பேன்

ஜாதியா பதமா தகதிமி தாமெனும் நடமா.....

என்னழகில் உன்னை வென்று ஆட வைப்பேன்

நீ என் மடியிலே விழுந்து ஆட வைப்பேன்

பதமா பதமா இது பரதநாட்டிய வதமா....

பெண் : கண்ணனுக்குக் கையிலுண்டு புல்லாங்குழல்

காமனுக்குக் கையிலுண்டு பஞ்சபாணம்

உன்னிடத்தில் என்ன உண்டு வாத்தியாரே

உன்னை ஓட ஓட நானடிப்பேன் ஆடிப்பாரு....

பெண் : சேலை கட்டும் பெண்களுக்கு நாணம் வேண்டும்

நான் தேடித் தேடிப் பார்த்து விட்டேன் அங்கே காணோம்

யாரிடத்தில் சவால் விட்டாய் போட்டுப் பாரு

நீ அறிந்து வந்த அத்தனையும் காட்டிப் பாரு......

பெண் : நடை கெட்ட கேட்டுக்கு நாட்டியம் வேறா

அடங்கட்டும் உன் ஆட்டம்

உன் நடனத்தைப் பார்த்தால் கலை கெட்டு போகும்

உடம்பே பேயாட்டம்......

பெண் : ஏது கெட்டுப் போனால் எனக்கென்னடி

அடி அடங்கட்டும் வாலாட்டம்

நான் இழுக்கிற இழுப்பில் மிதிக்கிற மிதியில்

பொடி படும் உன் ஆட்டம்

பெண் : என்னிடம் உள்ளது என்னவென்று நீயறிந்து

உன்னிடத்தில் உள்ளவற்றைக் காட்டலாம்

ஆடிக் காட்டலாம்

பெண் : இதுவரைக்கும் வந்த பின்பு

இதுல மட்டும் என்ன வம்பு

ஆடடி காலைப் போடடி

முடியும் மட்டும் மூடிப் பார்த்து

விடியும் மட்டும் ஆடிப் பார்த்து சொல்லடி

வந்து நில்லடி.....

பெண் : கேலிப் பேச்சு தப்பு என்று

தோல்வி தன்னை ஒப்புக் கொண்டு

கெஞ்சடி என்னைக் கொஞ்சடி......

Song information

Singer: P. Susheela

Music by: T. R. Pappa

Release information: From Avare En Deivam (1969) · Lyricist: Kannadasan

Explore this song