Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Kadavul Thandha iru malargal Kanmalarndha pon malargal Ondru paavai koondhalilae Ondru paadhai orathilae } (2) Female Part Kadavul Thandha iru malargal { Iru malargal } (2) Female Part { Kaatril Udhirndha vannamalar Kanneer sindhum chinna Malar } (2) Female Part { Aatril Vandhu serndhadhamma Alaigal kondu ponadhamma } (2) Female Part Paavai Koondhal serndha Malar paruvam kandu Pootha malar Female Part Paasam Kondu vandhadhamma Parisai thannai Thandhadhamma Female Part Kadavul Thandha iru malargal Kanmalarndha pon malargal Ondru paavai koondhalilae Ondru paadhai orathilae Female Part Kadavul Thandha iru malargal Female Part { Alaiyil Midhandha malar Kandu adhanmel Karunai manam Kondu } (2) Female Part { Thalaiyil Iraivan soodikondan Thaanae adhanai Serthukondan } (2) Female Part Kuzhalil Soodiya oru malarum Koyil serndha oru malarum Female Part Irandum Vaazhvil perumai Perum idhayam Engum amaidhi perum Female Part Kadavul Thandha iru malargal
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே } (2) பெண் : கடவுள் தந்த இரு மலர்கள் { இரு மலர்கள் } (2) பெண் : { காற்றில் உதிர்ந்த வண்ணமலர் கண்ணீர் சிந்தும் சின்ன மலர் } (2) பெண் : { ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா அலைகள் கொண்டு போனதம்மா } (2) பெண் : பாவை கூந்தல் சேர்ந்த மலர் பருவம் கண்டு பூத்த மலர் பெண் : பாசம் கொண்டு வந்ததம்மா பரிசாய் தன்னைத் தந்ததம்மா பெண் : கடவுள் தந்த இரு மலர்கள் கண்மலர்ந்த பொன் மலர்கள் ஒன்று பாவை கூந்தலிலே ஒன்று பாதை ஓரத்திலே பெண் : கடவுள் தந்த இரு மலர்கள் பெண் : { அலையில் மிதந்த மலர் கண்டு அதன்மேல் கருணை மனம் கொண்டு } (2) பெண் : { தலையில் இறைவன் சூடிக்கொண்டான் தானே அதனை சேர்த்துக்கொண்டான் } (2) பெண் : குழலில் சூடிய ஒரு மலரும் கோயில் சேர்ந்த ஒரு மலரும் பெண் : இரண்டும் வாழ்வில் பெருமை பெரும் இதயம் எங்கும் அமைதி பெறும் பெண் : கடவுள் தந்த இரு மலர்கள்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Iru Malargal (1967) · Lyricist: Lyricist Not Known
- Singer: P. Susheela
- Film / album: Iru Malargal
- Composer: M.S. Viswanathan