Roman script

Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Female Part

Harae gobala srihari maadhavaa

Harae gobala srihari maadhavaa

Andru paanjaali maanam kaaththavan neeyae

Bharatham poi solluma kannaa

Female Part

Harae gobala srihari maadhavaa

Andru paanjaali maanam kaaththavan neeyae

Bharatham poi solluma kannaa

Female Part

Harae gobala srihari maadhavaa

Female Part

Gobiyar selaiyai thirudiya kalvan

Gogula kannan allavaa…aa…

Komaala meniyai paavanai seithavan

Yaathava kannan allavaa….aa….

Female Part

Gowravar sabaiyilae aadaiyai thanthavan

Bhagavaan kannan allavaa

Kadavul manithanaa manithan kadavulaa

Kannaa unakku sollavaa

Kannaa unakku sollavaa

Female Part

Harae gobala srihari maadhavaa

Female Part

Enna un aasaiyo enna un thevaiyo

Ennidam nee ketkalaam

Ennaiyum rathaiyum ennum maadhavaa

Ennaiyum rathaiyum ennum maadhavaa

Edhanaiyum nee paarkkalaam

Female Part

Pon ezhil meniyai pugazhperum deviyai

Bhoomiyil nee kaakkalaam

Bodhaiyil solvathum geedhaiyil sonnathum

Ondrena nee kaattalaam

Ondrena nee kaattalaam

Female Part

Harae gobala srihari maadhavaa

Female Part

Iravil veenai shuruthiyai meettu

Ilamaiyin isai ketkalaam

Uravin sugaththil ulagaththai kaattu

Urasava porul kaanalaam

Female Part

Paruva nilaavai un megaththil moodu

Bharatha kadhai paadalaam

Bharatha kadhai paadalaam

Paavam oruththiyin vaazhvin kaakka

Paavam thavam aagalaam…aa

Paavam thavam aagalaam…..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா

ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா

அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே

பாரதம் பொய் சொல்லுமா கண்ணா

பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா

அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே

பாரதம் பொய் சொல்லுமா கண்ணா

பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா

பெண் : கோபியர் சேலையைத் திருடிய கள்வன்

கோகுலக் கண்ணன் அல்லவா....ஆ....

கோமள மேனியைப் பாவனை செய்தவன்

யாதவக் கண்ணன் அல்லவா.....ஆ.....

பெண் : கௌரவர் சபையிலே ஆடையைத் தந்தவன்

பகவான் கண்ணன் அல்லவா

கடவுள் மனிதனா மனிதன் கடவுளா

கண்ணா உனக்குச் சொல்லவா

கண்ணா உனக்குச் சொல்லவா

பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா

பெண் : என்ன உன் ஆசையோ என்ன உன் தேவையோ

என்னிடம் நீ கேட்கலாம்

என்னையும் ராதையை எண்ணும் மாதவா

என்னையும் ராதையை எண்ணும் மாதவா

எதனையும் நீ பார்க்கலாம்

பெண் : பொன் எழில் மேனியைப் புகழ்பெறும் தேவியைப்

பூமியில் நீ காக்கலாம்

போதையில் சொல்வதும் கீதையில் சொன்னதும்

ஒன்றென நீ காட்டலாம்

ஒன்றென நீ காட்டலாம்

பெண் : ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா

பெண் : இரவில் வீணை சுருதியை மீட்டு

இளமையின் இசை கேட்கலாம்

உறவின் சுகத்தில் உலகத்தைக் காட்டு

உற்சவப் பொருள் காணலாம்

பெண் : பருவ நிலாவை உன் மேகத்தில் மூடு

பாரதக் கதை பாடலாம்

பாரதக் கதை பாடலாம்

பாவம் ஒருத்தியின் வாழ்வின் காக்க

பாவம் தவம் ஆகலாம்....ஆ.....

பாவம் தவம் ஆகலாம்.....

Song information

Singer: P. Susheela

Music by: Shankar Ganesh

Release information: From Athaivida Ragasiyam (1978) · Lyricist: Kannadasan

Explore this song