Roman script
Singers : T. M. Soundarajan and P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female Part Enathu raaja sabaiyilae Orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam aahaa haa…..aa…. Enathu raaja sabaiyilae orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam Male Part Manthil oru kalangamillai Orey kondattam….mm…. Athil maivizhiyaal paadugindraal Kadhal vandattam….ooho ho….. Manthil oru kalangamillai Orey kondattam….mm…. Athil maivizhiyaal paadugindraal Kadhal vandattam…. Male Part Aahaa aahaa…..aa…. Aaha haa…..aaa…..aa….. Female Part Intha mugam enathu vaanil Chandhiran andro Idhu eduththu sollum vaarththai Enthan manthiram andro Female Part Intha mugam enathu vaanil Chandhiran andro Idhu eduththu sollum vaarththai Enthan manthiram andro Male Part Manthil oru kalangamillai Orey kondattam…. Male Part Kadhal endra kadalinil Nee thoniyallavaa….aa….
Kadhal endra kadalinil Nee thoniyallavaa…. Female : Ennai kai koduththu Kaakka vantha gnyaaniyallavaa Male Part Jaadhi malar punnagai En vedhamallavaa Jaadhi malar punnagai En vedhamallavaa Female : Athil saththamidum Unathu idhazh naadhamallavaa Naadhamallavaa Female Part Enathu raaja sabaiyilae Orey sangeetham Male Part Paruvakkaalam maarumpothu Maaruvathillai Paruvakkaalam maarumpothu Maaruvathillai Female : Adhu pani endraalum Mazhai endraalum vaaduvathillai Male Part Uruvaththilae ilamai sendru Mudhumai vanthaalum Uruvaththilae ilamai sendru Mudhumai vanthaalum Female Part Nam ullaththilae Mudhumai sendru Ilamai undaagum….. Ilamai undaagum….. Both : Namathu raaja sabaiyilae Orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam Female : Aahaa aahaa haa…. Male : Oo ooho oo oo…. Both : Namathu raaja sabaiyilae Orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆஹா ஹா.....ஆ.... எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆண் : மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம்....ம்ம்..... அதில் மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம்.....ஓஹோ ஹோ..... மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் அதில் மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம் ஆண் : ஆஹா ஆஹா.....ஆ...... ஆஹ ஹா.....ஆஅ.....ஆ..... பெண் : இந்த முகம் எனது வானில் சந்திரன் அன்றோ இது எடுத்து சொல்லும் வார்த்தை எந்தன் மந்திரம் அன்றோ ஆண் : இந்த முகம் எனது கோயில் கோபுரமன்றோ இது எனது நெஞ்சில் மெத்தையிட்ட தாமரையன்றோ ஓஹோஓஹோ..... ஆண் : மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் ஆண் : காதல் என்ற கடனிலில் நீ தோணியல்லவா....ஆ..... காதல் என்ற கடனிலில் நீ தோணியல்லவா... பெண் : என்னை கைக் கொடுத்து காக்க வந்த ஞானியல்லவா ஆண் : ஜாதி மலர் புன்னகை என் வேதமல்லவா ஜாதி மலர் புன்னகை என் வேதமல்லவா.... பெண் : அதில் சத்தமிடும் உனது இதழ் நாதமல்லவா..... நாதமல்லவா...... பெண் : எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் ஆண் : பருவக்காலம் மாறும்போது மாறுவதில்லை பருவக்காலம் மாறும்போது மாறுவதில்லை பெண் : அது பனி என்றாலும் மழை என்றாலும் வாடுவதில்லை ஆண் : உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் பெண் : நம் உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்....... இளமை உண்டாகும் ........ இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் பெண் : ஆஹாஆஹா ஹா.... ஆண் : ஓஓஹோ ஓ.....ஓ.... இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்
Song information
Singers: T. M. Soundarajan and P. Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kalyaniyin Kanavan (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Suseela
- Film / album: Kalyaniyin Kanavan
- Composer: S. M. Subbaih Naidu