Roman script

Singer : P. Susheela

Music by : Ben Surendar

Female Part

Devi sree devi

Devi sree devi laali suba laali

Thangamagal mahalakshmiyoo

Thangamagal mahalakshmiyoo

Thirumaeni manjal nila vannamo

Thogai mayilena ulaa vandhadhoo

Female Part

Magalae unnai kanden

Madiyinil ponnai kanden

Naan edhirpaartha vaazhvum

Ingae vanthathu

Thaayin vizhigalil inbam thanthathu

Female Part

Magalaai kulamagalaai madhuraiyil

Valar meenaal vandhaal

Manithamizh moondrum iniya

Mazhalai aanadhoo

Female Part

Mazhaiyaai arul pozhiyum vizhigalil

Iru meengal kondaal

Valam varum thaayin

Idhayam vaigai aanadhoo

Female Part

Karumbu vil sumandhidum

Kaanji kaamatchiyoo

Maraigalum purivadhu avaladhu aaraaichiyoo

Aval thaan ivalo ivalukku ponn oonjaloo

Vaazhvum ingae vandhadhu

Thaayin vizhigalil inbam thanthathu

Female Part

Devi sree devi laali suba laali

Thangamagal mahalakshmiyoo

Thirumaeni manjal nila vannamo

Thogai mayilena ulaa vandhadhoo

Female Part

Karumaari annaiyin uruvamum neeyoo

Thiruverkaatil ezhundharulvaayoo

Enakaana madiyilae thondriya saeiyo

Tharaniyil naanum thaaikkoru thaayoo

Female Part

Muruganai pesa veithaval neeyoo

Kollur vaazhum moogaambigaiyo

Sankaran pottrum deviyum neeyoo

Sagalarum yerkkum bagavathi thaayoo

Female Part

Aval thaan ivalo

Ivalukku ponn oonjaloo

Vaazhvum ingae vandhadhu

Thaayin vizhigalil inbam thanthathu

Female Part

Devi sree devi laali suba laali

Thangamagal mahalakshmiyoo

Thirumaeni manjal nila vannamo

Thogai mayilena ulaa vandhadhoo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பென் சுரேந்தர்

பெண் : தேவி ஸ்ரீதேவி

தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி

தங்கமகள் மகாலட்சுமியோ

தங்கமகள் மகாலட்சுமியோ

திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ

தோகை மயிலென உலா வந்ததோ

பெண் : மகளே உன்னை கண்டேன்

மடியினில் பொன்னைக் கண்டேன்

நான் எதிர்ப்பார்த்த வாழ்வும் இங்கே வந்தது

தாயின் விழிகளில் இன்பம் தந்தது

பெண் : மகளாய் குலமகளாய்

மதுரையில் வளர் மீனாள் வந்தாள்

மணித் தமிழ் மூன்றும்

இனிய மழலையானதோ

பெண் : மழையாய் அருள் பொழியும் விழிகளில்

இரு மீன்கள் கொண்டாள்

வலம் வரும் தாயின்

இதயம் வைகை ஆனதோ

பெண் : கரும்பு வில் சுமந்திடும்

காஞ்சி காமாட்சியோ

மறைகளும் புரிவது அவளது ஆராய்ச்சியோ

அவள்தான் இவளோ

இவளுக்கு பொன்னூஞ்சலோ

வாழ்வும் இங்கே வந்தது

தாயின் விழிகளில் இன்பம் தந்தது....

பெண் : தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி

தங்கமகள் மகாலட்சுமியோ

திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ

தோகை மயிலென உலா வந்ததோ....

பெண் : கருமாரி அன்னையின் உருவமும் நீயோ

திருவேற்காட்டில் எழுந்தருள்வாயோ

எனக்கான மடியிலே தோன்றிய சேயோ

தரணியில் நானும் தாய்க்கொரு தாயோ

பெண் : முருகனை பேச வைத்தவள் நீயோ

கொல்லூர் வாழும் மூகாம்பிகையோ

சங்கரன் போற்றும் தேவியும் நீயோ

சகலரும் ஏற்கும் பகவதி தாயோ

பெண் : அவள்தான் இவளோ

இவளுக்கு பொன்னூஞ்சலோ

வாழ்வும் இங்கே வந்தது

தாயின் விழிகளில் இன்பம் தந்தது

பெண் : தேவி ஸ்ரீதேவி லாலி சுப லாலி

தங்கமகள் மகாலட்சுமியோ

திருமேனி மஞ்சள் நிலா வண்ணமோ

தோகை மயிலென உலா வந்ததோ....

Song information

Singer: P. Susheela

Music by: Ben Surendar

Release information: From Sarvam Sakthi Mayam (1986) · Lyricist: Vaali

Explore this song