Roman script
Singers : P. Susheela and Sarojini Music by : Master Venu Lyrics by : Udumalai Narayanakavi Female Part Anbinaal endrum neengal ondraai vaazhanum Anbinaal endrum neengal ondraai vaazhanum Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum Chorus : Anbinaal serum sondhamai Endrum neengal ondraai vaazhanum Female Part Kondavarai ullam ennum Koyilukkul vaikkonum Kozhunthanai thanae pettra Kuzhandhaiyaaga nenaikanum Bandhu janam ellorukkum Patchamaaaga irukkanum Bandhu janam ellorukkum Patchamaaaga irukkanum Parthavin petrror thammai Paadhukaathu madhikanum Chorus Anbinaal endrum neengal ondraai vaazhanum Female Part Inba thunbam edhunalaum Pangudaiyal samsaaram Illaalum illa veettil Yerpadhaadhu alangaram Ambuviyil anil padhi Pen enbadhu needhisaaram Ambuviyil anil padhi Pen enbadhu needhisaaram Arindhu nada thambhi iruvarum Oruvarukku oruvar aadhaaram Chorus Anbinaal maganae sondhamai Endrum neengal ondraai vaazhanum Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum Anbinaal endrum neengal ondraai vaazhanum Female Part Thandhai thaayin perukunnal Thaazh vara nadakkathae Sambaththu vandhaalum nee Thar perumai adikkathae Sandhadhamum kanavan sollai Thaduthu mugam sulikathae Sandhadhamum kanavan sollai Thaduthu mugam sulikathae Samyam thaan kidaikum bothu Thalayanai mandhiram jabikathae Chorus Anbinaal maganae sondhamai Endrum neengal ondraai vaazhanum Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum Anbinaal endrum neengal ondraai vaazhanum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சரோஜினி இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும் அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும் ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் குழு : அன்பினால் சேரும் சொந்தமாய் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்.... பெண் : கொண்டவரை உள்ளம் என்னும் கோயிலுக்குள் வைக்கோணும் கொழுந்தனை தானே பெற்ற குழந்தையாக நெனைக்கணும் பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும் பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும் பர்தாவின் பெற்றோர் தம்மை பாதுகாத்து மதிக்கணும்... குழு : அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும் பெண் : இன்ப துன்பம் ஏதானாலும் பங்குடையாள் சம்சாரம் இல்லாளும் இல்லா வீட்டில் ஏற்படாது அலங்காரம் அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம் அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம் அறிந்து நட தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரம் குழு : அன்பினால் மகனே சொந்தமாய் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்.... ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும் பெண் : தந்தை தாயின் பேருக்குன்னால் தாழ்வு வர நடக்காதே சம்பத்து வந்தாலும் நீ தற்பெருமை அடிக்காதே சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே சமயம் தான் கிடைக்கும்போது தலையணை மந்திரம் ஜபிக்காதே.. குழு : அன்பினால் மகனே சொந்தமாய் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்.... ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும் அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்
Song information
Singers: P. Susheela and Sarojini
Music by: Master Venu
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Sarojini · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu
Explore this song
- Singer: P. Susheela and Sarojini
- Film / album: Manjal Mahimai
- Composer: Master Venu
- Lyricist: Udumalai Narayanakavi