Roman script
Singer : Ghantasala Music by : Master Venu Lyrics by : Udumalai Narayanakavi Male Part Carilae savari seiyum Kannam sivandha ponnamma Un kannam sivandhadhu enna endru nee Enni paarthdhum undaama Male Part Ooril vaazhum ezhai pennugalin Uzhaippin panamae unaveaagi Ooril vaazhum ezhai pennugalin Uzhaippin panamae unaveaagi Unavin rasndhaan kozhuppaai maari Un melae jollikudhu theriyuma Male Part Carilae savari seiyum Kannam sivandha ponnamma Un seerum sirappulla singaara vaazhvai Kooruven konjam nidhaniyamma Male Part Panju methai manjam meedhu Paduthu thoongum ponnamma Panju methai manjam meedhu Paduthu thoongum ponnamma Un panju methai manjam vandhadhai Nenjil ninaithadhum undamoo Male Part Vanjamillar vazhakkamaanar Vaazha theriya ezhaiyaanaar Vanjamillar vazhakkamaanar Vaazha theriya ezhaiyaanaar Kanjikaagavae kastapadubavar Kai thiramai enna theriyuma Male Part Carilae savari seiyum Kannam sivandha ponnamma Un seerum sirappulla singaara vaazhvai Kooruven konjam nidhaniyamma Male Part Piditha pidikkul adangum salla Udaikkul minukkum ponnamma Piditha pidikkul adangum salla Udaikkul minukkum ponnamma Nee uduthum saelaiyundaana unmaiyai Unarndhu paarthadhum undaamoo Male Part Kizhindha kovanam tharitham varumai Piditha maandhrgal neithaar kandaai Kizhindha kovanam tharitham varumai Piditha maandhrgal neithaar kandaai Uzhaikka pala per sugikka sila per Irukka inimel mudiyathamma Male Part Carilae savari seiyum Kannam sivandha ponnamma Un seerum sirappulla singaara vaazhvai Kooruven konjam nidhaniyamma
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி ஆண் : காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா உன் கன்னம் சிவந்தது என்ன என்று நீ எண்ணிப் பார்த்ததும் உண்டாமா.. ஆண் : ஊரில் வாழும் ஏழைப் பெண்களின் உழைப்பின் பணமே உணவேயாகி ஊரில் வாழும் ஏழைப் பெண்களின் உழைப்பின் பணமே உணவேயாகி உணவின் ரசந்தான் கொழுப்பாய் மாறி உன் மேலே ஜொலிக்குது தெரியுமா ஆண் : காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக் கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா.. ஆண் : பஞ்சு மெத்தை மஞ்சம் மீது படுத்து தூங்கும் பொன்னம்மா பஞ்சு மெத்தை மஞ்சம் மீது படுத்து தூங்கும் பொன்னம்மா உன் பஞ்சு மெத்தை மஞ்சம் வந்ததை நெஞ்சில் நினைத்ததும் உண்டாமா ஆண் : வஞ்சமில்லார் வழக்கமானார் வாழத் தெரியா ஏழையானார் வஞ்சமில்லார் வழக்கமானார் வாழத் தெரியா ஏழையானார் கஞ்சிக்காகவே கஷ்டப்படுபவர் கைத் திறமை என்ன தெரியுமா ஆண் : காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக் கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா.. ஆண் : பிடித்த பிடிக்குள் அடங்கும் சல்லா உடைக்குள் மினுக்கும் பொன்னம்மா பிடித்த பிடிக்குள் அடங்கும் சல்லா உடைக்குள் மினுக்கும் பொன்னம்மா நீ உடுத்தும் சேலையுண்டான உண்மையை உணர்ந்து பார்த்ததும் உண்டாமா.... ஆண் : கிழிந்த கோவணம் தரித்தும் வறுமை பிடித்த மாந்தர்கள் நெய்தார் கண்டாய் கிழிந்த கோவணம் தரித்தும் வறுமை பிடித்த மாந்தர்கள் நெய்தார் கண்டாய் உழைக்கப் பல பேர் சுகிக்கச் சில பேர் இருக்க இனிமேல் முடியாதம்மா..... ஆண் : காரிலே சவாரி செய்யும் கன்னம் சிவந்த பொன்னம்மா உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக் கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..
Song information
Singer: Ghantasala
Music by: Master Venu
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Enga Veettu Mahalaskhmi (1957) · Singer: Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Enga Veettu Mahalaskhmi
- Composer: Master Venu
- Lyricist: Udumalai Narayanakavi