தமிழ்

ஆண் : வா வா வஞ்சி

இளம் மானே

ஆண் : வா வா வஞ்சி

இளம் மானே

வந்தால் என்னைத் தருவேனே

வா வா வஞ்சி

இளம் மானே

வந்தால் என்னைத் தருவேனே

வாழ்நாளிலே நீங்காமலே

நீ பாதி நான் பாதியாக

பெண் : வந்தாள்

வஞ்சி இள மானே

கொண்டாள் உன்னை

இங்கு தானே

ஆண் : ஈரெட்டு வயதில்

ஈரத் தாமரை

வாய் விட்டுச் சிரிக்காதா

பெண் : வாய் விட்டுச் சிரிக்கும்

மாலை வேலையில்

தேன் சொட்டு தெறிக்காதா

ஆண் : தேகத்தில் உனக்கு

தேன் கூடு இருக்கு

தாகத்தை தணித்திட வா

பெண் : ஆனாலும்

நீ காட்டும் வேகம்

ஆத்தாடி ஆகாதம்மா

ஆண் : பொன்வண்டு

கூத்தாடும் போது

பூச்செண்டு நோகாதம்மா

பெண் : போதும் போதும் போ

ஆண் : வா வா வஞ்சி

இளம் மானே

வந்தால் என்னை தருவேனே

வாழ்நாளிலே நீங்காமலே

நீ பாதி நான் பாதியாக

பெண் : வந்தாள் வஞ்சி

இள மானே

கொண்டால் உன்னை

இங்கு தானே

பெண் : நான் உன்னை

நினைத்தேன்

நேத்து ராத்திரி

நூலாட்டம் இளைத்தேனே

ஆண் : நான் கூட தவித்தேன்

வேறு மாதிரி

பாலாட்டம் கொதித்தேனே

பெண் : ஆசைகள் எனக்கும்

அங்கங்கே சுரக்கும்

ஆளைத்தான் அசத்துவதேன்

ஆண் : பொன் வண்டு

கூத்தாடும் போது

பூச்செண்டு நோகாதம்மா

பெண் : கால் மீது

கால் போட்டு ஆட

கல்யாண நாள் இல்லையா

ஆண் : நேரம் காலம் ஏன்

பெண் : வந்தாள்

வஞ்சி இள மானே

கொண்டால் உன்னை

இங்கு தானே

வாழ்நாளிலே நீங்காமலே

நீ பாதி நான் பாதியாக

ஆண் : வா வா

வஞ்சி இளம் மானே

வந்தால் என்னைத் தருவேனே

பெண் : வந்தாள்

வஞ்சி இளமானே

கொண்டால் உன்னை

இங்கு தானே

Song information

படம்: குரு சிஷ்யன் (1988)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா

Album: குரு சிஷ்யன்

Explore this song