தமிழ்
வா வா என் வீணையே நனனா விரலோடு கோபமா நனனா மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா ஆஆஆ வா வா என் வீணையே நனனா விரலோடு கோபமா நனனா நனன் நனனா தண்டோடு தாமரை ஆட வண்டோடு மோகனம் பாட நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட தண்டோடு தாமரை ஆட வண்டோடு மோகனம் பாட நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட துணை தேடுதோ தனிமை துயர் கூடுதோ அணை மீறுதோ உணர்ச்சி அலை பாயுதோ நாள் தோறும் ராத்திரி மேடையில் ரகசிய பாஷையில் பாட வா வா உன் வீணை நான் நனனா விரல் மீட்டும் வேளைதான் நனனா மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ ஓஓஒ கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ ஓஒஓ சந்தோஷ மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட சந்தோஷ மந்திரம் ஓத சந்தர்ப்பம் சாதகமாக நாள் பார்ப்பதோ இன்னமும் இன்ப நாடகம் போட இரவாகலாம் இளமை அரங்கேறலாம் உறவாடலாம் இனிய சுரம் பாடலாம் கேட்காத வாத்திய ஓசைகள் கேட்கையில் ஆசைகள் தீரும் வா வா என் வீணையே லலலா விரலோடு கோபமா லலலா மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ ஓஓஓ கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ ஓஓஓ வா வா என் வீணையே லலலா விரலோடு கோபமா லலலா வா வா உன் வீணை நான் நனனா விரல் மீட்டும் வேளைதான் நனனா நனன் நனனா
Song information
படம்: சட்டம் (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
இசை: கங்கை அமரன்
இயற்றியவர்: வாலி
Album: சட்டம்
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: வாணி ஜெயராம்
- Film / album: சட்டம்
- Composer: கங்கை அமரன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: மாதவி
- Actor: சரத் பாபு
- Actor: ஒய்.ஜி. மகேந்திரன்
- Actor: ஜெய்சங்கர்
- Actor: விஜயகுமார்
- Actor: கே. பாலாஜி
- Actor: மனோரமா
- Actor: இளவரசி
- Actor: சில்க் ஸ்மிதா