தமிழ்

ஆண் : யாகி யாகி யாகி யாராகி

யாகி யாகி யாகி

யாராகி யாராகி யாராகி ஹே

தையாரி தையாரி.

ஹே யாகி யாகி யாகி ராராரா

ஹே ராராரா

ஆண் : வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

ஆண் : நண்டூரும் நரியூரும்

கருவேலங் காட்டோரம்

தட்டானைச் சுத்திச் சுத்தி

வட்டம் போட்டோமே

ஆண் : பசி வந்தா குருவி முட்டை

தண்ணிக்கு தேவன் குட்டை

பறிப்போமே சோளத்தட்டை

புழுதி தான் நம்ம சட்டை

புழுதி தான் நம்ம சட்டை ஆஆஆ

ஆண் : வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

குழு : ஆஆஆ ஏஏஏ ஹோ

ஆண் : வேப்பங்கொட்டை

அடிச்சு வந்த

ரத்தம் ரசிச்சோம்

ஆண் : வத்திக்குச்சி

அடுக்கி கணக்கு

பாடம் படிச்சோம்

ஆண் : தண்ணியில்லா ஆத்தில்

கிட்டிப்புல்லு அடிச்சோம்

ஆண் : தண்டவாளம் மேல

காசை வச்சு தொலைச்சோம்

ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி

அப்பாவோட வேட்டியில

கண்ணாடி லென்சை வச்சு

சினிமா காமிச்சோம்

ஆண் : அண்ணாச்சி கடையில தான்

எண்ணெயில தீக்குளிச்ச

பரோட்டாக்கு பாதி சொத்தை

நாம அழிச்சோம்

ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்

ஓட்டம் போட்டு திரிஞ்சோம்

வெயிலத் தவிர வாழ்க்கையில

வேற என்ன அறிஞ்சோம்

ஆண் : வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

குழு : ஹேஹேஹே ஹேஹே ஹேஹே

ஹேஹேஹே ஹேஹே ஹேஹே

ஹேஹேஹே ஹேஹே ஹேஹே

ஹேஹேஹே ஹேஹே ஹேஹே

லேலேலே லேலேலே லேலேலே

லேலேலே லேலேலே லேலேலே

ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி

வீட்டில் அடைச்சோம்

ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி

சிறையில் வளர்த்தோம்

ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு

பேயை ஆட்டுனோம்

ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க

மீசை ஒட்டுனோம்

ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி

கல்யாணம் தான் கட்டிக்குவோம்

ஆண் : கழுதை மேல ஊர்வலமா

ஊரை சுத்துனோம்

ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம்

எப்பவாச்சும் மழை பெய்யும்

அப்ப நாங்க மின்னலுல

போட்டோ புடிச்சோம்

ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான்

இந்த ஊரை உணர்ந்தோம்

வெயிலைத் தவிர வாழ்க்கையில

வேற என்ன அறிஞ்சோம்

ஆண் : வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

ஆண் : நண்டூரும் நரியூரும்

கருவேலங் காட்டோரம்

தட்டானைச் சுத்திச் சுத்தி

வட்டம் போட்டோமே

ஆண் : பசி வந்தா குருவி முட்டை

தண்ணிக்கு தேவன் குட்டை

பறிப்போமே சோளத்தட்டை

புழுதி தான் நம்ம சட்டை

புழுதி தான் நம்ம சட்டை ஆஆஆ

குழு : வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி

வெயிலோடு உறவாடி

வெயிலோடு மல்லுக்கட்டி

ஆட்டம் போட்டோமே

Song information

படம்: வெயில் (2006)

பாடியவர்கள்: ஜாசி கிப்ட், பிரசன்னா, திப்பு மற்றும் கைலாஷ் கெர்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

இயற்றியவர்: நா. முத்துக்குமார்

Album: வெயில்

Explore this song