தமிழ்

ஆண்: முதல் மழையே

முதல் மழையே

முதன் முதலாய்

என்னை நனைக்கிறியே

பெண்: முதல் விதையே

முதல் விதையே

முதன் முதலாய்

நெஞ்சில் முளைக்கிறியே

ஆண்: என்னை மறந்தேனே நானே

உந்தன் வசமாகிப் போனேன்

பெண்: உன்னை நினைத்தேனே நானே

என்னை மறந்தே தான் போனேன்

ஆண்: என் பாதி நீ

உன் பாதி நான்

பெண்: என் பாதை நீ

உன் பாதம் நான்

ஆண்: முதல் மழையே

முதல் மழையே

முதன் முதலாய்

என்னை நனைக்கிறியே

ஆண்: இருவரின் பார்வைகள்

உரசிடும் நேரம்

இதயத்தில் மழையுடன்

மின்னல்கள் தோன்றும்

பெண்: இடைவெளி கொஞ்சமாய்

குறைந்திடும் நேரம்

சுவாசத்தில் செல்லமாய்

வெப்பங்கள் கூடும்

ஆண்: யாரோடும் பேசவில்லையே

எங்கேயும் போகவில்லையே

என்னாச்சு பெண்ணே எனக்கு

பெண்: பசி தாகம் தோன்றவில்லையே

படித்தாலும் நினைவில் இல்லையே

புடிச்சாச்சு காதல் கிறுக்கு

ஆண்: உன் காதோரம்

கம்மலா நான் பிறந்திடவா

உன் கன்னத்த

உரசித்தான் கிடந்திடவா

பெண்: முதல் விதையே

முதல் விதையே

முதன் முதலாய்

நெஞ்சில் முளைக்கிறியே

பெண்: இருவரின் வேர்வைகள்

இணைத்திடும் நேரம்

இதுவரை வாழ்ந்ததே

இதற்கென தோன்றும்

ஆண்: இருவரின் வாசங்கள்

கலந்திடும் நேரம்

உயிரிலே புது புது

கலவரம் தோன்றும்

பெண்: சில்லென்று தென்றல் வீசுதே

சட்டென்று தீயும் வீசுதே

இது தானா காதல் மயக்கம்

ஆண்: சொல்லாமல் உதடு பேசுதே

நில்லாமல் கண்கள் தேடுதே

வந்தாச்சு காதல் எனக்கும்

பெண்: அட இது என்ன

இது என்ன புது சுகமோ

உன் சொந்தம் போல்

வேறேதும் உடன் வருமோ

ஆண்: முதல் மழையே

முதல் மழையே

முதன் முதலாய்

என்னை நனைக்கிறியே

பெண்: என்னை மறந்தேனே நானே

உந்தன் வசமாகி போனேன்

ஆண்: உன்னை நினைத்தேனே நானே

என்னை மறந்தே தான் போனேன்

பெண்: என் பாதி நீ

உன் பாதி நான்

ஆண்: என் பாதை நீ

உன் பாதம் நான்

பெண்: என் பாதி நீ

உன் பாதி நான்

ஆண்: என் பாதை நீ

உன் பாதம் நான்

Song information

படம்: மாயாண்டி குடும்பத்தார் (2009)

பாடியவர்கள்: பல்ராம், சைந்தவி

இசை: சபேஷ் - முரளி

பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்

Album: மாயாண்டி குடும்பத்தார்

Explore this song