தமிழ்
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ஆண் : காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன் உசுருக்குள் கோயில் கட்டி ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன் ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம் உன்ன நெனச்சாலே பூவாசந்தான் பாத மேல பூத்திருப்பேன் கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன் ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ஆண் : கண்ணாடி பார்க்கையில அங்க முன்னாடி உன் முகந்தான் கண்ணே நீ போகையில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான் ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாறட்டுமா மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன் உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன் ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ ஆண் : காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக
Song information
படம்: சூரிய வம்சம் (1997)
இசை: எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர்: ரா. ரவிசங்கர்
பாடியவர்: ஹரிஹரன்
Album: சூரிய வம்சம்
Explore this song
- Film / album: சூரிய வம்சம்
- Composer: எஸ். ஏ. ராஜ்குமார்
- Lyricist: ரா. ரவிசங்கர்
- Actor: சரத்குமார்
- Actor: தேவயானி
- Actor: ராதிகா
- Actor: மணிவண்ணன்
- Actor: ப்ரியா ராமன்
- Actor: ஜெய்கணேஷ்
- Actor: அஜய் ரத்னம்
- Actor: ஆனந்த ராஜ்
- Actor: ஆர். சுந்தர்ராஜன்
- Actor: நிழல்கள் ரவி
- Actor: சிங்கமுத்து
- Actor: ரமேஷ்கன்னா
- Actor: ராஜ குமாரன்