தமிழ்

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்

என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்

என் விழி ஏங்கும் பூக்காலம்

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே

ஐயோ அது எனக்கு பிடித்ததடி

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே

ஐயோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்

என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்

என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொத்தித்ததே உயிர் மிதந்ததே

ஐயோ அது எனக்கு பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே

ஐயோ பைத்தியமே பிடித்ததடி

முதல் முறை என்விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே

தலையணை உறையின் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே

காலை தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே

கிறுக்கன் என்றொரு பேரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி..

கண்முன்னே நடப்பதும் மறந்திடுமே

வவ்வாலைப் போல் நம் உலகமும் மாறி

தலைகீழாகத் தொங்கிடுமே

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே

ஐயோ அது எனக்கு பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலைந்ததே

ஐயோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே

பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே

காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே

ஓ... குட்டிப்பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

ஊ ஆ ...ஆ ஊ ஆ.... ஊ ஆ ரா....... ரா ரே

ஓ... காதலும் ஒருவகை போதை தானே

உள்ளுக்குள் வெறியேற்றும் பேய் போல

ஏனிந்த தொல்லை என்று தள்ளி போனால்

புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே

ஐயோ அது எனக்கு பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே

ஐயோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்

வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்

என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்

என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொத்தித்ததே உயிர் மிதந்ததே

ஐயோ அது எனக்கு பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலைந்ததே

ஐயோ பைத்தியமே பிடித்ததடா...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

Song information

படம்: பொல்லாதவன் (2007)

பாடியவர்: கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

இயற்றியவர்: நா. முத்துக்குமார்

Album: பொல்லாதவன்

Explore this song