தமிழ்
பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண்: அரண்மனை அன்னக்கிளி தரையில நடப்பது நடக்குமா அடுக்குமா பெண்: பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ள சுகம் அரண்மனை கொடுக்குமா ஆண்: குளுகுளு அறையில கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா பெண்: சிலுசிலு சிலுவென இங்கிருக்கும் காத்து அங்க அடிக்குமா கிடைக்குமா ஆண்: பளிங்கு போல உன் வீடு வழியில பள்ளம் மேடு பெண்: வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு ஆண்: அதிசயமான பெண்தானே பெண்: புதுசுகம் தேடி வந்தேனே ஆண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் பெண்: கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம் ஆண்: கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம் பெண்: ரத்தினங்கள் தெறிக்குது முத்துமணி ஜொலிக்குது நடந்திடும் நதியிலே ஆண்: உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொண்ணும் புரியல்லே பெண்: கவிதை பாடும் காவேரி ஜதிய சேர்த்து ஆடும் ஆண்: அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும் பெண்: போதும் போதும் உம் பாட்டு ஆண்: பொறப்படப் போறேன் நிப்பாட்டு பெண்: போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் ஆண்: ஓடும் பொன்னி ஆறும் பாடும் கானம் நூறும் பெண்: காலம் யாவும் பேரின்பம் காணும் நேரம் ஆனந்தம் ஆண்: போவோமா ஊர்கோலம் பெண்: பூலோகம் எங்கெங்கும்
Song information
படம்: சின்ன தம்பி (1991)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவர்ணலதா
Album: சின்ன தம்பி
Explore this song
- Singer: எஸ். பி. பாலசுப்ரமணியம்
- Singer: சுவர்ணலதா
- Film / album: சின்ன தம்பி
- Composer: இளையராஜா
- Lyricist: கவிஞர் வாலி
- Actor: பிரபு
- Actor: குஷ்பூ
- Actor: மனோரமா
- Actor: ராதாரவி
- Actor: கவுண்டமணி
- Actor: சுலக்ஷனா
- Actor: பாண்டு