தமிழ்
ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே பபபா பபபா நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஹான் நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும் இரு மலர்கள் நீயும் நானும் பிரியாமல் நாம் உறவாடலாம் ஒரு விழியில் காயம் என்றால் மறு விழியும் கண்ணீர் சிந்தும் உனக்காக நான் எனக்காக நீ இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓச ை இன்றும் என்றும் ஏற்க வேண்டும் எனது ஆசை ஹே ஹே நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது யாரும் உன்னை சொந்தம் கொண்டால் இடையில் வந்த உரிமை என்றால் அதற்காக நான் வழக்காடுவேன் யாரும் உன்னை திருடிச் செல்ல பார்த்து நிற்கும் தோழன் அல்ல உனக்காக நான் காவல் நிற்பேன் எனது மனமும் எனது நினைவும் உனது வசமே நமக்கு ஏது பிரித்துப் பார்க்க இரண்டு மனமே ஹே ஹே நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா லாலல்லா
Song information
படம்: சட்டம் (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன்
இசை: கங்கை அமரன்
இயற்றியவர்: வாலி
Album: சட்டம்
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: மலேசியா வாசுதேவன்
- Film / album: சட்டம்
- Composer: கங்கை அமரன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: மாதவி
- Actor: சரத் பாபு
- Actor: ஒய்.ஜி. மகேந்திரன்
- Actor: ஜெய்சங்கர்
- Actor: விஜயகுமார்
- Actor: கே. பாலாஜி
- Actor: மனோரமா
- Actor: இளவரசி
- Actor: சில்க் ஸ்மிதா