தமிழ்
நித்தம் புது தேசம் அழைக்கவே தங்கமே கண்ணுறங்கு புத்தும் புது நேசம் தழைக்கவே வைரமே கண்ணுறங்கு குத்தங் குறை இல்லா என் உறவே ரத்தினமே கண்ணுறங்கு பத்தமடை பாயில் பொன் எழிலே பத்திரமாய் கண்ணுறங்கு ஜோ ஜோ ஜோ மைவிழியே ஜோ ஜோ ஜோ மான்விழியே ஜோ ஜோ ஜோ வான்மழையே ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ அந்த ஆதவன் தந்த நன்கொடை நீயோ நான் யாரென்று சொல்லும் ஓர் விரல் நீயோ என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ அந்த வானை இருக்கும் வரையில் உன் வெளியா நான் இருப்பேன் உன்னை அல்லும் பகலும் காத்திடவே கருமாரியா நான் இருப்பேன் உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே சொர்ணமே என் சொர்ணமே உன் கண்ணீரை தினம் துடைப்பேனே சர்வமே என் சர்வமே உன் உச்சிதனை முகர்ந்து உனக்கெனவே இருப்பேன் என் உயிர் அது போனாலும் உன் அருகினில் தான் கிடப்பேன் ஜோ ஜோ ஜோ மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே ஜோ ஜோ ஜோ வான் மழையே ஜோ ஜோ ஜோ முத்தெழிலே மை விழியே ஜோ ஜோ ஜோ மான் விழியே கண்ணுறங்கு ஜோ ஜோ ஜோ வான் மழையே பொன் எழிலே கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
Song information
படம்: அரண்மனை 4 (2024)
பாடியவர்: மீனாக்ஷி இளையராஜா
இசை: ஹிப்ஹாப் தமிழா
பாடலாசிரியர்: கோ சேஷா
Album: அரண்மனை 4
Explore this song
- Film / album: அரண்மனை 4
- Composer: ஹிப்ஹாப் தமிழா
- Lyricist: கோ சேஷா
- Actor: சுந்தர் சி
- Actor: தமன்னா
- Actor: ராஷி கண்ணா
- Actor: கோவை சரளா
- Actor: யோகிபாபு
- Actor: விடிவி கணேஷ்
- Actor: சேஷூ
- Actor: மொட்டை ராஜேந்திரன்