தமிழ்

பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ

ஆரிராரிரோ ஆரிராரிரோ

ஆரிராரிரோ ஆரிராரிரோ

பெண் : சின்னஞ்சிறு கிளியே

சித்திரப் பூவிழியே

சின்னஞ்சிறு கிளியே

சித்திரப் பூவிழியே

அன்னை மணம் ஏங்கும்

தந்தை மணம் தூங்கும்

நாடகம் ஏனடா

நியாயத்தை கேளடா

சின்னஞ்சிறு கிளியே

பெண் : சுகமே நினைத்து

சுயம்வரம் தேடி

உடனே தவிக்கும்

துயரங்கள் கோடி

மழை நீர் மேகம்

விழிகளில் மேவும்

இந்த நிலை மாறுமோ

அன்பு வழி சேருமோ

கண்கலங்கி பாடும்

எனது பாசம்

உனக்கு வேஷமோ

வாழ்ந்தது போதுமடா

வாழ்க்கை இனியேன்

பெண் : சின்னஞ்சிறு

ஆண் : சின்னஞ்சிறு கிளியே

சித்திரப் பூவிழியே

சின்னஞ்சிறு கிளியே

சித்திரப் பூவிழியே

உன்னை எண்ணி நானும்

உள்ளம் தடுமாறும்

வேதனை பாரடா

வேடிக்கை தானடா

சின்னஞ்சிறு கிளியே

ஆண் : மயிலே உன்னை நான்

மயக்கவும் இல்லை

மனதால் என்றும்

வெறுக்கவும் இல்லை

என்னை நீ தேடி

இணைந்தது பாவம்

எல்லாம் நீயே

எழுதிய கோலம்

இந்த நிலை

காணும் பொழுது

நானும் அழுது வாழ்கிறேன்

காலத்தின் தீர்ப்புகளை

யாரறிவாரோ ஓஓ

பெண் : சின்னஞ்சிறு கிளியே

சித்திரப் பூவிழியே

ஆண் : உன்னை எண்ணி நானும்

உள்ளம் தடுமாறும்

பெண் : நாடகம் ஏனடா

நியாயத்தை கேளடா

ஆண் : சின்னஞ்சிறு கிளியே

.
பெண் : சித்திரப் பூவிழியே

Song information

படம்: முந்தானை முடிச்சு (1983)

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை: இளையராஜா

இயற்றியவர்: முத்துலிங்கம்

Album: முந்தானை முடிச்சு

Explore this song