தமிழ்

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை

அவள் மனம் கொண்ட

ரகசிய ராகத்தை பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை

அவள் மனம் கொண்ட

ரகசிய ராகத்தை பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஆண் : கண்கள் சொல்கின்ற கவிதை

இளம் வயதில் எத்தனை கோடி

கண்கள் சொல்கின்ற கவிதை

இளம் வயதில் எத்தனை கோடி

ஆண் : என்றும் காதலை

கொண்டாடும் காவியமே

புதுமை மலரும் இனிமை

அந்த மயக்கதில் இணைவது

உறவுக்கு பெருமை

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை

அவள் மனம் கொண்ட

ரகசிய ராகத்தை பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ஆண் : நெஞ்சில் உள்ளாடும் ராகம்

இதுதானா கண்மணி ராதா

நெஞ்சில் உள்ளாடும் ராகம்

இதுதானா கண்மணி ராதா

ஆண் : உன் புன்னகை

சொல்லாத அதிசயமா

அழகே இளமை ரதமே

அந்த மாயனின் லீலையில்

மயங்குது உலகம்

ஆண் : சின்னக் கண்ணன் அழைக்கிறான்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை

அவள் மனம் கொண்ட

ரகசிய ராகத்தை பாடி

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்

Song information

படம்: கவிக்குயில் (1977)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: பஞ்சு அருணாச்சலம்

பாடியவர்: எம். பாலமுரளிகிருஷ்ணா

Album: கவிக்குயில்

Explore this song